பிரியாணி கிடைக்குமா?| Dinamalar

சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

பிரியாணி கிடைக்குமா?

Added : ஆக 18, 2021 | கருத்துகள் (2)
Share
பிரியாணி கிடைக்குமா?கோவைக்கு வந்த முன்னாள் அமைச்சர் வேலுமணியை, 100க்கும் மேற்பட்ட அ.தி.மு.க., தொண்டர்கள், மேளம் அடித்தும், கோஷம் எழுப்பியும் வரவேற்றனர்.வேலுமணி நிருபர்களிடம் கூறுகையில், 'அரசியல் ரீதியாக பழி வாங்கும் நோக்கத்தில், தி.மு.க., அரசு, என் மீது பொய் வழக்கு போட்டுள்ளது. எனக்கு உறுதுணையாகவும், ஆதரவாகவும் இருந்த அனைவருக்கும் நன்றி' என்றார்.அங்கிருந்த
பக்க வாத்தியம்


பிரியாணி கிடைக்குமா?




கோவைக்கு வந்த முன்னாள் அமைச்சர் வேலுமணியை, 100க்கும் மேற்பட்ட அ.தி.மு.க., தொண்டர்கள், மேளம் அடித்தும், கோஷம் எழுப்பியும் வரவேற்றனர்.வேலுமணி நிருபர்களிடம் கூறுகையில், 'அரசியல் ரீதியாக பழி வாங்கும் நோக்கத்தில், தி.மு.க., அரசு, என் மீது பொய் வழக்கு போட்டுள்ளது. எனக்கு உறுதுணையாகவும், ஆதரவாகவும் இருந்த அனைவருக்கும் நன்றி' என்றார்.அங்கிருந்த இளைஞர் ஒருவர், 'அதெல்லாம் கிடக்கட்டும்... அடுத்தமுறை அமைச்சர் வீட்டில் 'ரெய்டு' நடந்தால், தொண்டர்களுக்கு பிரியாணி போடுவாங்களா...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X