சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஆக 18, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
தமிழக பா.ஜ., பொதுச் செயலர் ராகவன்: சில கோவில்களின் அர்ச்சகர்கள் பரம்பரை பரம்பரையாக இறை சேவையில் ஈடுபடுகின்றனர். உச்ச நீதிமன்ற தீர்ப்புகளும் இத்தகைய பரம்பரை அர்ச்சகர்களின் உரிமையை அங்கீகரித்துள்ளது. அத்தகைய கோவில்களில் உள்ள அர்ச்சகர்கள் அரசு பணியாளர்கள் அல்ல; அரசும் அவர்களுக்கு மாத சம்பளமும் கொடுப்பதில்லை. எனவே அவர்களை பதவியிலிருந்து நீக்குவது சரியல்ல.'டவுட்'


'டவுட்' தனபாலு

தமிழக பா.ஜ., பொதுச் செயலர் ராகவன்: சில கோவில்களின் அர்ச்சகர்கள் பரம்பரை பரம்பரையாக இறை சேவையில் ஈடுபடுகின்றனர். உச்ச நீதிமன்ற தீர்ப்புகளும் இத்தகைய பரம்பரை அர்ச்சகர்களின் உரிமையை அங்கீகரித்துள்ளது. அத்தகைய கோவில்களில் உள்ள அர்ச்சகர்கள் அரசு பணியாளர்கள் அல்ல; அரசும் அவர்களுக்கு மாத சம்பளமும் கொடுப்பதில்லை. எனவே அவர்களை பதவியிலிருந்து நீக்குவது சரியல்ல.

'டவுட்' தனபாலு: நாடு முழுதும், தமிழக அரசின் செயலுக்கு கடும் கண்டனம் எழுந்ததும், 'எல்லா கோவில்களிலும் அர்ச்சகர்களை நீக்கவில்லை; சில கோவில்களில் மட்டுமே நீக்கியுள்ளோம்' என, தமிழக அரசு கூறியுள்ளது. இதில், ஆன்மிகவாதிகளின் கேள்வி என்னவென்றால், 'எவ்வளவோ பிரச்னைகள் இருக்கையில், ஹிந்து மத விவகாரங்களில் தமிழக அரசு ஏன் ஆர்வம் காட்டவேண்டும்' என்பது தான். இது தான் இந்த அரசின் மறைமுக செயல் திட்டமோ என்ற, 'டவுட்' வருகிறது!


பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்:
வீட்டு பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை, உயர்த்தப்பட்டுள்ளது எந்த வகையிலும் நியாயமற்றது. கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்துள்ள ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கக் கூடியது.

'டவுட்' தனபாலு: நாட்டில் நடக்கும் போராட்டங்களில், முக்கால்வாசி போராட்டம், பெட்ரோலிய பொருட்கள் விலையேற்றத்தை கண்டித்து தான். எனினும், முறை வைத்து இதன் விலை ஏற்றப்படுகிறது. எனவே, போராட்டங்களால் விலை உயர்வு நின்றபாடில்லை என்பது, 'டவுட்' இன்றி புரிகிறது. எனினும், அடுத்த சில நாட்களில் சில கட்சிகள், போராட்டத்தை அறிவிக்கும் பாருங்கள்!

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர், நடிகர் கமல் ஹாசன்:
விண்ணப்பித்து பெறுவதற்கு பெயர் விருதல்ல; அது பரிசு. விருது என்பது தகுதியான ஆளுமையைத் தேடி வர வேண்டும். தற்போது விருது பெறுவதில், மன்னராட்சி தொனி இருக்கிறது. இந்த வழக்கத்தை உடனடியாக மாற்றுவது தான் நல்ல அரசின் செயல்.

'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்வதைப் பார்த்தால், அந்த காலத்தில் மன்னரை புலவர்கள் புகழ்ந்து பாடி, பரிசு பெற்று செல்வது போல, இப்போது முதல்வரை உயர்த்தி பேசுபவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றனவோ என்ற, 'டவுட்' வருகிறது. மேலும், பீட்டர் அல்போன்ஸ், லியோனி, சந்திரசேகர் போன்றவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டதில், உங்களின் புகார் உண்மை தானோ என்ற, 'டவுட்'டும் வருகிறது!

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
19-ஆக-202123:55:46 IST Report Abuse
Anantharaman Srinivasan எவ்வளவோ பிரச்னைகள் இருக்கையில், ஹிந்து மத விவகாரங்களில் தமிழக அரசு ஏன் ஆர்வம் காட்டவேண்டும் ? பிராமண சமுதாயத்தை ஒடுக்கவே. திமுக தலைவர்கள் வீட்டு நிச்சயதார்த்தம் பந்தக்கால், திருமணம், சீமந்தம் வளைகாப்பு, கருமாதி திதிக்கு, தேர்தல் நேரத்தில் ரகசியமாக யாகம் செய்யமட்டும் ஐயர்கள் வேண்டும். பணத்துகும் தலைவர்கள் அறிமுகம் வேண்டி ஆசைபட்டு சில ஐயர்கள் செல்கிறார்கள்...
Rate this:
Cancel
Ramarao Ramanaidu - Kuala Lumpur,மலேஷியா
19-ஆக-202120:57:19 IST Report Abuse
Ramarao Ramanaidu திமுக ஹிந்து விரோதக் கட்சி என்பது இப்போதுதான் தெரியுமா? நெற்றியில் இட்ட திருநீறை அழித்த போதும், கொட்டியப் போதும் தெரியாதா ஸ்டாலின் ஹிந்து விரோதி என்று? இரா. இராமராவ், கோலாலம்பூர், மலேசியா.
Rate this:
Cancel
Ramarao Ramanaidu - Kuala Lumpur,மலேஷியா
19-ஆக-202120:54:41 IST Report Abuse
Ramarao Ramanaidu தேடிப் போய் பரிசு கொடுக்கும் அளவுக்கு கமலஹாசன் அவ்வளவு பெரிய ஆள் அல்ல. இரா. இராமராவ், கோலாலம்பூர், மலேசியா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X