சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

அரசு பள்ளிகளை முன்னேற்ற எளிய வழி!

Added : ஆக 18, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
அரசு பள்ளிகளை முன்னேற்ற எளிய வழி!கா.இளஞ்செழியன், குன்னுார், தேனி மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் அதிரடியாக உயர்வு பெற எளிதான வழி இருக்கையில், திட்டம் பல தீட்டுவது ஏன் என தெரியவில்லை!மக்கள் பிரதிநிதி மற்றும் அரசு அலுவலர்களின் குழந்தைகள் கண்டிப்பாக அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும் என உத்தரவிட்டாலே, அத்தனை பிரச்னையும்


அரசு பள்ளிகளை முன்னேற்ற எளிய வழி!கா.இளஞ்செழியன், குன்னுார், தேனி மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் அதிரடியாக உயர்வு பெற எளிதான வழி இருக்கையில், திட்டம் பல தீட்டுவது ஏன் என தெரியவில்லை!மக்கள் பிரதிநிதி மற்றும் அரசு அலுவலர்களின் குழந்தைகள் கண்டிப்பாக அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும் என உத்தரவிட்டாலே, அத்தனை பிரச்னையும் முடிவுக்கு வந்துவிடும் என்பது கண்கூடு.முக்கியமாக அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் தான் சேர்க்க வேண்டும். அப்போது தான், அவர்கள் தரமாக கல்வி கற்பிக்கும் பணியில் ஈடுபடுவர்.அரசு அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதால் பல்வேறு நன்மைகள் விளையும். பள்ளியின் சுகாதாரம் முதல், அனைத்து குறைகளும் உடனுக்குடன் சரி செய்யப்படும்.ஏனோ, இந்த நடவடிக்கையை அரசு மேற்கொள்வதில்லை. அரசு சம்பளம் மட்டும் வேண்டும்; அரசு பள்ளி வேண்டாமா?தனியார் பள்ளியில் தான் தரமான கல்வி கற்பிக்கப்படுகிறது என்றால், பல ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தை, ஏன் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியமாக அள்ளிக் கொடுக்க வேண்டும்?தமிழை வளர்ப்பதாக கூறும் இந்த ஆட்சியிலாவது, அரசு பள்ளிகள் மேம்படுத்தப்படுமா?


கடனை அடைக்க முயற்சியுங்கள்!எஸ்.சையது முகமது, புதுக்கோட்டையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க.,விற்கென பிரத்யேகமாக ஒரு குணம் உண்டு. திட்டங்களை அறிவித்ததும் அதற்காக பிரமாண்டமாக சுயவிளம்பரம் செய்து கொள்வர். அத்தோடு அத்திட்டம் கிடப்பில் போடப்படும்.உதாரணத்திற்கு இரண்டே இரண்டு விஷயங்களை சுட்டி காட்டுகிறோம்...சென்னை கிண்டியில் குதிரை பந்தயம் ஜோராக நடந்தது. கருணாநிதி முதல்வரானதும், 'ரேஸ் கிளப்'புக்கும், அவருக்கும் கொடுக்கல், வாங்கலில் என்ன தகராறு நடந்ததோ... 'குதிரைபந்தயத்தை ஒழித்தே தீருவேன்' என சபதம் போட்டார்.உடனடியாக அதை செயல்படுத்தினார். 200 ஆண்டுகளாக நடந்த குதிரை பந்தயத்தை ஒழித்ததற்கான நினைவு சின்னம் என, சென்னையில் இரு இடங்களில் குதிரை சிலை அமைத்து பெருமை தேடி கொண்டார்.'மெட்ராஸ் ரேஸ் கிளப்' உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, கருணாநிதியின் உத்தரவுக்கு தடை வாங்கி, இன்றும் குதிரை பந்தயத்தை, 'ஜாம் ஜாம்' என தொடர்ந்து
நடத்தி வருகிறது.அடுத்தது, சேது சமுத்திர திட்டம்.மத்திய அமைச்சரவையில் தி.மு.க.,வை சேர்ந்த டி.ஆர்.பாலு, கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது துவங்கப்பட்ட திட்டம்.இந்த திட்டம் அறிவிப்பு செய்த அடுத்த நாளே தமிழகம் எங்கும், 'கங்கை கொண்ட சோழனே, சேது கண்ட நாயகனே' எனகருணாநிதியை போற்றி புகழ்ந்து பரணி பாடி, போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.அந்த திட்டம் அமையவிருந்த இடத்தில், சில மாதங்கள் கடலில் துார் வாரப்பட்டது. பின் அந்த திட்டம் சாத்தியமில்லை என கைவிடப்பட்டது.அச்சக உரிமையாளர், ஒப்பந்ததாரர், தி.மு.க., தலைமை, டி.ஆர்.பாலு ஆகியோர் பலன் அடைந்தனரே தவிர, பொது மக்களுக்கு அந்த திட்டத்தால் தம்பிடி பிரயோஜனம் இல்லை.தற்போது 2021ல் ஆட்சி பீடத்தில் ஏறிய நாள் முதலாக, முதல்வர்ஸ்டாலினும், ஏனைய அமைச்சர்களும் சகட்டுமேனிக்கு அறிவிப்புகளை அள்ளி வீசுகின்றனர்.
'கருணாநிதி பெயரில் நுாலகம் கட்டுவோம், 2,500 கோடி ரூபாயில் பூங்காக்கள் அமைப்போம், 'டிஜிட்டல்' மின் அளவைகள் வாங்குவோம், கூவத்தை சீரமைப்போம், மேலவையை மீண்டும் கொண்டு வருவோம்' என கூறி, நம்மை திணறடிக்கின்றனர்.இவ்வளவு அறிவிப்புகளையும் முழங்கி விட்டு, 'அரசு கஜானாவில் பணம் இல்லை; தமிழக அரசு 5.70 லட்சம் கோடி ரூபாய் கடனில் இருக்கிறது' எனக் கூறுகின்றனர்.கஜானாவில் பணம் இல்லாத போது, எதற்காக தேவையில்லாத திட்டங்களை அறிவித்து, கடன் சுமையை ஏன் அதிகரிக்க வேண்டும்?பொழுது விடிந்தால் ஒரு அறிவிப்பு வெளியிடுவதை நிறுத்துங்கள்; நிர்வாகத்தை சிறப்பாக நடத்துங்கள்!மீதியுள்ள 57 மாத ஆட்சி காலத்திற்குள்ளாவது, தமிழக அரசு வாங்கியுள்ள கடனுக்குரிய வட்டியை தவறாமல் கட்டி, அசலில் 1 லட்சம் கோடிரூபாயையாவது திருப்பிச் செலுத்த முயலுங்கள்!


ஜாதியை ஒழிக்கும் லட்சணம்!எஸ்.ராமகிருஷ்ணன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தை ஆளும் திராவிட கட்சிகள் 55 ஆண்டுகளாகஜாதிகளை ஒழித்து வருவதாக சொல்லி கொள்கின்றன. ஆனால் ஜாதிகள் ஒழிந்ததா என்ன?எல்லா இடங்களிலும் ஜாதி ஒழிக்கப்பட்டு விட்டது... மீதி இருப்பது, மாணவர் பயிலும் பாடங்களில் இடம்பெற்றிருக்கும் அறிஞர்கள் பெயர்களில் மட்டுமே என, தி.மு.க., நினைக்கிறது போலும்!அறிஞர்களின் பெயரில் ஒட்டியிருந்த ஜாதியை நீக்கியதால், பெரிய சமூக சீர்திருத்தம் செய்துள்ளதாக தி.மு.க., பெருமை கொள்கிறது.இதற்கு முன்னரே, தெருவில் உள்ள ஜாதி பெயர்களை நீக்கியதால் ஏற்பட்ட குழப்பங்கள் இன்றும் தீர்ந்தபாடில்லை.கோவை நகரில் இருந்த தெலுங்கு பிராமணர் வீதி, 'தெலுங்கு வீதி' எனவும்; கருப்ப கவுண்டர் வீதி என்பது, 'கருப்ப வீதி' எனவும் மாற்றியுள்ளனர்.
ஆனால் செட்டி வீதி, வைசியாள் வீதி போன்ற பல வீதிகளின் பெயரில் உள்ள ஜாதியை நீக்கவில்லை. அதை நீக்கினால், வெறும் 'வீதி' மட்டும் தான் மிஞ்சும்.தமிழகத்தில் ஊர்களின் பெயரிலும் ஜாதி உள்ளது. போடிநாயக்கனுாரை, 'போடியூர்' என்றால் எப்படி இருக்கும்?ஜி.கே.மூப்பனார், வைத்தியநாத ஐயர், ஏ.வி.மெய்யப்பச் செட்டியார், செண்பகராமன் பிள்ளை, முத்துராமலிங்கத் தேவர் இப்படி எண்ணற்ற பெரியோரின் அடையாளத்தில் ஜாதிஇணைந்துள்ளது.
அதை நீக்கினால், அவர்களை பெரும்பாலானோருக்கு தெரியாது என்பதே உண்மை.உண்மையிலேயே ஜாதியை ஒழிக்க வேண்டும் என அரசு நினைத்தால், மாணவர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்குவதை நிறுத்த வேண்டும். ஜாதி ரீதியிலான இடஒதுக்கீடு முறையை ஒழிக்க வேண்டும்... செய்ய தைரியம் இருக்கிறதா தமிழக அரசுக்கு? திராவிட கழகங்கள் ஜாதி பார்த்து தானே வேட்பாளரை நிறுத்துகின்றன. 'ஜாதிவேண்டாம்' என சொல்வோருக்கு தேர்தலில் எதற்கு தனி தொகுதி? இந்த அளவில் தான், திராவிட கழகங்களின் ஜாதி ஒழிப்பு லட்சணம் இருக்கிறது.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
20-ஆக-202100:05:27 IST Report Abuse
Anantharaman Srinivasan திராவிட கழகங்கள் ஜாதி பார்த்து தானே வேட்பாளரை நிறுத்துகின்றன. 'ஜாதிவேண்டாம்' என சொல்வோருக்கு தேர்தலில் எதற்கு தனி தொகுதி? இந்த லட்சணத்தில் ஜாதி ஒழிப்பு நாடகம் எதற்கு ? ஊரை ஏமாற்றவே ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X