சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : ஆக 18, 2021
Share
Advertisement
'என்னைத் தவிர வேறு யாருக்கும் பொருளாதாரம் தெரியாது என, சுப்ரமணியசாமி போல கூறுபவர், கற்றுக் கொள்ள முன்வருவாரா...' என, எதிர்கேள்வி கேட்கத் தோன்றும் வகையில், பா.ஜ., மாநில துணை தலைவர் துரைசாமி பேட்டி: தமிழக அரசின், இரண்டு நிதிநிலை அறிக்கையில் 97 சதவீத மக்கள் சந்தோஷமாக இல்லை. தமிழக நிதி அமைச்சர் தியாகராஜனை, குஜராத்துக்கு 100 நாட்கள் அனுப்பி, அங்குள்ள நடைமுறையை கற்று, அதன் பின்

பேச்சு, பேட்டி, அறிக்கை

'என்னைத் தவிர வேறு யாருக்கும் பொருளாதாரம் தெரியாது என, சுப்ரமணியசாமி போல கூறுபவர், கற்றுக் கொள்ள முன்வருவாரா...' என, எதிர்கேள்வி கேட்கத் தோன்றும் வகையில், பா.ஜ., மாநில துணை தலைவர் துரைசாமி பேட்டி: தமிழக அரசின், இரண்டு நிதிநிலை அறிக்கையில் 97 சதவீத மக்கள் சந்தோஷமாக இல்லை. தமிழக நிதி அமைச்சர் தியாகராஜனை, குஜராத்துக்கு 100 நாட்கள் அனுப்பி, அங்குள்ள நடைமுறையை கற்று, அதன் பின் கடனில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும்.


'இவர்களை விட, பிரிவினைவாதம் பேசும் அரசியல்வாதிகள் தான் அதிக அதிகாரம் கொண்டவர்களாக விளங்குகின்றனர்...' என, கூறத் துாண்டும் வகையில், தமிழக பா.ஜ., - எம்.எல்.ஏ., காந்தி பேட்டி:
தமிழகத்தில் இப்போது ஆதிக்க ஜாதி, அடிமை ஜாதி என்பதெல்லாம் கிடையாது. அது காலம் கடந்த ஒன்று. இன்றைய சூழலில் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் வலுவாக இருப்பவனே ஆதிக்கம் செலுத்துகிறான்.


'எத்தனை இளரத்தங்களை பாய்ச்சினாலும், தமிழகத்தில் காங்., தேறாது என்கின்றனரே, அ.தி.மு.க.,வினர்...' என, 'போட்டு'க் கொடுக்கத் தோன்றும் வகையில், சட்டசபை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி:
காங்., தற்போதைய தலைவர் அழகிரியை மாற்றி விட்டு, அந்த இடத்திற்கு இளம் தலைவர் ஒருவரை நியமிக்க, காங்., - எம்.பி., ராகுல் திட்டமிட்டுள்ளார். அந்த இளம் தலைவர் கரூர் எம்.பி., ஜோதிமணியா என எனக்கு தெரியாது.


'பல முன்னுதாரணங்கள் இருந்த போதும், எப்படி நம்பினீர்கள்...' என, கேட்கத் தோன்றும் வகையில், பா.ஜ., முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் பேட்டி
: வெள்ளை அறிக்கையை அளித்தபோது, மகத்தான மாற்றத்தை பட்ஜெட்டில் தரப் போகின்றனர் என நினைத்தோம். ஆனால், வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும், பின் ஜோடனை செய்வதும் தான் வரலாறு என்பதை தி.மு.க., நிரூபித்து உள்ளது.


'கடவுள் இல்லை என சொல்பவர்களுக்கும் இறை நம்பிக்கை இருக்கிறது என நீங்கள் சொன்னால் நாங்கள் நம்ப வேண்டுமா...' என, மடக்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் பேச்சு:
தமிழகத்தில் இறை உணர்வு, இறை நம்பிக்கை எல்லாருக்கும் உள்ளது. அதையே அரசியலுக்கு, பா.ஜ., பயன்படுத்துகிறது. அதைத் தான் யாரும் விரும்ப மாட்டார்கள்


.
'அமெரிக்காவில் படித்தவர்; அங்கேயே நீண்ட காலம் வேலை பார்த்தவர். இப்போது, தமிழகத்திற்கு, 'தொண்டாற்ற' வந்துள்ளார். பொறுத்துக் கொள்ளத் தான் வேண்டும்...' என, ஜாடை மாடையாக சொல்லத் தோன்றும் வகையில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கை:
தமிழக நிதியமைச்சர் தியாகராஜனுக்கு, நிதித்துறையுடன் தமிழ் துறையையும் சேர்த்து வழங்க வேண்டும். அவர் வாயில் இருந்து வரும் செந்தமிழ் நன்கு, 'வறளுகிறது!'

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X