பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஆக 18, 2021
Share
Advertisement
ஆக., 19, 1887புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில், 1887 ஆக., 19ம் தேதி பிறந்தவர் சத்தியமூர்த்தி. வழக்கறிஞராக பணியாற்றியவர், காங்கிரசில் இணைந்து, 'சைமன் கமிஷன் எதிர்ப்பு, ஒத்துழையாமை இயக்கம், சுதேசி இயக்கம்' என, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார்.இந்திய சுதந்திரம் தொடர்பாக பேச்சு நடத்த, காங்கிரஸ் சார்பில் இருமுறை இங்கிலாந்து சென்றார். 1923-ல் தேர்தலில் போட்டியிட்டு

இதே நாளில் அன்று


ஆக., 19, 1887



புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில், 1887 ஆக., 19ம் தேதி பிறந்தவர் சத்தியமூர்த்தி. வழக்கறிஞராக பணியாற்றியவர், காங்கிரசில் இணைந்து, 'சைமன் கமிஷன் எதிர்ப்பு, ஒத்துழையாமை இயக்கம், சுதேசி இயக்கம்' என, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார்.இந்திய சுதந்திரம் தொடர்பாக பேச்சு நடத்த, காங்கிரஸ் சார்பில் இருமுறை இங்கிலாந்து சென்றார். 1923-ல் தேர்தலில் போட்டியிட்டு சட்டசபை உறுப்பினரானார். காந்தி, சர்தார் வல்லபபாய் படேலுடன் நட்பு பாராட்டினார்.கடந்த 1930-ல் சென்னை பார்த்தசாரதி கோவிலில் தேசிய கொடியை ஏற்ற முயன்றபோது கைது செய்யப்பட்டார். காமராஜரின் அரசியல் வழிகாட்டியாக திகழ்ந்தார். 1936ல் காங்கிரஸ் கமிட்டி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939-ல் சென்னை மேயராக
பணியாற்றினார்.தன் அனைத்து சொத்துக்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இறுதியில், வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் சிரமப்பட்டார். 1943 மார்ச் 28ம் தேதி தன் 56வது வயதில் காலமானார்.'தீரர்' சத்தியமூர்த்தி பிறந்த தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X