காஞ்சி தும்பவனம் கால்வாய் தூர்வாரும் பணி துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காஞ்சி தும்பவனம் கால்வாய் தூர்வாரும் பணி துவக்கம்

Added : ஆக 18, 2021
Share
காஞ்சிபுரம்:வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காஞ்சிபுரத்தில் உள்ள மூன்று கால்வாய்களை துார்வாரும் பணியை, நகராட்சி நிர்வாகம் துவக்கியுள்ளது. காஞ்சிபுரம் நகராட்சி பகுதிகளில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்காக, மூன்று பிரதான மழை நீர் கால்வாய்கள் உள்ளன.திருப்பருத்திகுன்றம் பகுதியில் இருந்து செல்லும் தும்பவனம் கால்வாய், மாவட்ட கலெக்டர்
 காஞ்சி தும்பவனம் கால்வாய் தூர்வாரும் பணி துவக்கம்

காஞ்சிபுரம்:வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காஞ்சிபுரத்தில் உள்ள மூன்று கால்வாய்களை துார்வாரும் பணியை, நகராட்சி நிர்வாகம் துவக்கியுள்ளது.

காஞ்சிபுரம் நகராட்சி பகுதிகளில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்காக, மூன்று பிரதான மழை நீர் கால்வாய்கள் உள்ளன.திருப்பருத்திகுன்றம் பகுதியில் இருந்து செல்லும் தும்பவனம் கால்வாய், மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள வேகவதி ஆற்றில் கலக்கிறது.

ஜெம் நகரில் இருந்து இரட்டை கால்வாய், ஓரிக்கை வழியாக தேனம்பாக்கம் ஏரியில் கலக்கும் வகையில் அமைந்துள்ளது.நகரின் முக்கிய கால்வாயான மஞ்சள் நீர் கால்வாய், பிள்ளையார்பாளையம் பகுதியில் இருந்து பல்லவர்மேடு, ஆனந்தாபேட்டை, திருக்காலிமேடு வழியாக நத்தப்பேட்டை ஏரியில் கலக்கிறது.இந்த கால்வாய்கள் சில இடங்களில் துார்ந்து, தண்ணீர் செல்லாத நிலையில் இருந்தது.

இந்நிலையில், பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மூன்று கால்வாய்களை துார் வாரும் பணி துவங்கியுள்ளது.நகராட்சி ஆணையர் லட்சுமி கூறுகையில், ''வடகிழக்கு பருவ மழைக்கு முன், மழை நீர் கால்வாய்களை துார் வார வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.''அதன்படி, தும்பவனம் கால்வாய் துார் வாரும் பணி துவங்கியுள்ளது. ஒரு மாதத்திற்குள், நகரில் உள்ள மூன்று கால்வாய்களும் துார் வாரும் பணி முடிக்கப்படும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X