750 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

750 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு

Added : ஆக 18, 2021
Share
சென்னை:மின் தேவையை சமாளிக்க, குறுகிய கால அடிப்படையில், மின் வாரியம் 750 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது.தமிழக மின் தேவை தினமும் சராசரியாக, 14 ஆயிரம் மெகா வாட்டாக உள்ளது. ஊரடங்கு தளர்வால், தொழிற்சாலைகள் போன்றவை முழுவீச்சில் செயல்பட்டு வருவதால், மின் தேவை அதிகரித்து வருகிறது.இதனால், குறுகிய கால அடிப்படையில், செப்., 6 முதல் 30 வரையிலான காலத்தில், 24 மணி

சென்னை:மின் தேவையை சமாளிக்க, குறுகிய கால அடிப்படையில், மின் வாரியம் 750 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது.

தமிழக மின் தேவை தினமும் சராசரியாக, 14 ஆயிரம் மெகா வாட்டாக உள்ளது. ஊரடங்கு தளர்வால், தொழிற்சாலைகள் போன்றவை முழுவீச்சில் செயல்பட்டு வருவதால், மின் தேவை அதிகரித்து வருகிறது.இதனால், குறுகிய கால அடிப்படையில், செப்., 6 முதல் 30 வரையிலான காலத்தில், 24 மணி நேரமும் பயன்படுத்துவதற்காக, மின் வாரியம் 750 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்காக, தற்போது இணையதள, 'டெண்டர்' கோரியுள்ளது.

மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:காற்றாலை சீசன் இருந்தாலும், மழை காரணமாக காற்றாலைகளில் இருந்து, அதிக மின்சாரம் கிடைக்கவில்லை. அக்டோபரில் வடகிழக்கு பருவ மழை சீசன் துவங்குவதால்,அதற்கு முந்தைய செப்டம்பரில் வெயில் அதிகம் இருக்கும். எனவே, மின் தேவையை பூர்த்தி செய்ய 750 மெகா வாட் மின்சாரம் வாங்க முடிவு செய்யப் பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X