பொது செய்தி

தமிழ்நாடு

வனத்துறை அதிகாரிகள் 59 பேர் மாற்றம்

Added : ஆக 18, 2021
Share
Advertisement
சென்னை:வனத்துறையில், கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர்கள் ஆறு பேர்; தலைமை வனப் பாதுகாவலர்கள் 10 பேர் உட்பட 59 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.சென்னை வட்ட தலைமை வனப் பாதுகாவலராக இருந்த கருணபிரியா, வண்டலுார் உயிரியல் பூங்கா இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார். மனித வள மேம்பாட்டு பிரிவில் இருந்த வனப்பாதுகாவலர் கீதாஞ்சலி, சென்னை வட்ட வனப் பாதுகாவலராக

சென்னை:வனத்துறையில், கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர்கள் ஆறு பேர்; தலைமை வனப் பாதுகாவலர்கள் 10 பேர் உட்பட 59 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை வட்ட தலைமை வனப் பாதுகாவலராக இருந்த கருணபிரியா, வண்டலுார் உயிரியல் பூங்கா இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார். மனித வள மேம்பாட்டு பிரிவில் இருந்த வனப்பாதுகாவலர் கீதாஞ்சலி, சென்னை வட்ட வனப் பாதுகாவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல சென்னை, கோவை, திருச்சி, திருவள்ளூர், மதுரை, ஈரோடு, சேலம், நீலகிரி, திருநெல்வேலி, வேலுார், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 12 மாவட்ட வன அலுவலர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை, வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை முதன்மை செயலர் சுப்ரியாசாகு பிறப்பித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X