பொது செய்தி

தமிழ்நாடு

பெயரளவுக்கு நடந்த கருத்து கேட்பு கூட்டம்

Added : ஆக 18, 2021
Share
Advertisement
கீழச்சேரி:திருப்பந்தியூர், திருமணிக்குப்பம் ஊராட்சியில் நடத்த வேண்டிய கருத்து கேட்பு கூட்டம், அங்கு நடத்தாமல் கீழச்சேரி ஊராட்சியில், அதிவிரைவு நெடுஞ்சாலை குறித்து நடந்தது.கடம்பத்துார் ஒன்றியம், கீழச்சேரியில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின்கீழ், சென்னை - பெங்களூரு எட்டு வழி விரைவு சாலை குறித்து கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது.இதில், மாவட்ட
 பெயரளவுக்கு  நடந்த கருத்து கேட்பு கூட்டம்

கீழச்சேரி:திருப்பந்தியூர், திருமணிக்குப்பம் ஊராட்சியில் நடத்த வேண்டிய கருத்து கேட்பு கூட்டம், அங்கு நடத்தாமல் கீழச்சேரி ஊராட்சியில், அதிவிரைவு நெடுஞ்சாலை குறித்து நடந்தது.

கடம்பத்துார் ஒன்றியம், கீழச்சேரியில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின்கீழ், சென்னை - பெங்களூரு எட்டு வழி விரைவு சாலை குறித்து கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது.இதில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செந்துார்பாண்டி, தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்ட இயக்குனர் மோகன், நில எடுப்பு ஆர்.டி.ஓ., நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவள்ளூர் கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.

சென்னை - பெங்களூரு விரைவு சாலை,திருவள்ளூர் மாவட்டத்தில், கடம்பத்துார் ஒன்றியத்தில், பழைய திருப்பந்தியூர், புதிய திருமணிக்குப்பம் ஆகிய பகுதியில் 248.550 கி.மீ., முதல், 249.320 கி.மீட்டர் வரை, 0.770 மீட்டரில் மட்டும் தான் அமைய உள்ளது.இந்த கருத்து கேட்பு, திருப்பந்தியூர், திருமணிக்குப்பம் ஊராட்சி பகுதியில் நடைபெறாமல், கீழச்சேரி ஊராட்சியில் நடந்தது சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.

மேலும், இந்த கருத்து கேட்பு கூட்டத்தில், மப்பேடு, கீழச்சேரி ஊராட்சியைச் சேர்ந்த பொது மக்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் பங்கேற்றனர்.ஏற்கனவே, திருப்பந்தியூர் மற்றும் திருமணிக்குப்பம் ஊராட்சிகளில், இரண்டு முறை கூட்டம் போடப்பட்டு ரத்து செய்யப் பட்டது. வரும் காலங்களிலாவது கருத்து கேட்பு கூட்டத்தை சம்பந்தப்பட்ட ஊராட்சி பகுதிகளில் நடத்த மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X