தலிபானுக்கு ஆதரவு தெரிவித்த எம்.பி., மீது தேசதுரோக வழக்கு

Added : ஆக 18, 2021
Share
Advertisement
சம்பல்:உத்தர பிரதேசத்தில் தலிபான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பேசிய சமாஜ்வாதி எம்.பி., மீது, தேச துரோக சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்கு சமாஜ்வாதிஎம்.பி., ஷபிக்யுர் ரஹ்மான், ஆப்கனை தலிபான் ஆக்கிரமித்ததை இந்திய சுதந்திர போராட்டத்துடன் ஒப்பிட்டு பேசியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டு

சம்பல்:உத்தர பிரதேசத்தில் தலிபான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பேசிய சமாஜ்வாதி எம்.பி., மீது, தேச துரோக சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்கு சமாஜ்வாதிஎம்.பி., ஷபிக்யுர் ரஹ்மான், ஆப்கனை தலிபான் ஆக்கிரமித்ததை இந்திய சுதந்திர போராட்டத்துடன் ஒப்பிட்டு பேசியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது. இதையடுத்து ஷபிக்யுர் ரஹ்மான் மீது, தேச துரோக சட்டத்தின் கீழ் உ.பி., போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

.மக்களிடையே மதம், மொழி, இனம், பிறப்பு ஆகியவை சார்ந்த வெறுப்புணர்வை துாண்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஷபிக்யுர் ரஹ்மான் கூறியதை ஆதரித்து சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிட்ட சமாஜ்வாதி பிரமுகர்கள் மீதும், தேச துரோக சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஷபிக்யுர் ரஹ்மான் கூறியுள்ளதாவது:ஆப்கனை, ரஷ்யா அல்லது அமெரிக்கா ஆளக் கூடாது. மண்ணின் மைந்தர்களான தலிபான்களே ஆள வேண்டும் என அந்நாட்டு மக்கள் கருதுவதாகத்தான் கூறினேன்.என் கருத்து திரித்து வெளியிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை நீதிமன்றத்தில் சந்தித்து, நிரபராதி என்பதை நிரூபிப்பேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


சர்ச்சை

ஆப்கனில் தலிபான் ஆட்சி அமைந்துள்ளதற்கு, அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரிய உறுப்பினரான மவுலானா சஜத் நோமானி பாராட்டு தெரிவித்துள்ளார். 'தலிபான் போராளிகளுக்கு ஹிந்தி முஸ்லிமின் சல்யூட்' என, அவர் தெரிவித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X