சுனந்தா மரண வழக்கு: சசி தரூர் விடுதலை

Added : ஆக 18, 2021
Share
Advertisement
புதுடில்லி:சுனந்தா புஷ்கர் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கிலிருந்து அவரின் கணவரும், காங்கிரஸ்எம்.பி.,யுமான சசி தரூர்விடுவிக்கப் பட்டார்.முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், 2014ல் டில்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த மரணம் தொடர்பாக, டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி

புதுடில்லி:சுனந்தா புஷ்கர் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கிலிருந்து அவரின் கணவரும், காங்கிரஸ்எம்.பி.,யுமான சசி தரூர்விடுவிக்கப் பட்டார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், 2014ல் டில்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த மரணம் தொடர்பாக, டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 3,000 பக்கங்கள்இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சசி தரூர் சேர்க்கப்பட்டு இருந்தார். 3,000 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

சசி தரூர் எம்.பி.,யாக உள்ளதால் இந்த வழக்கை அரசியல் தலைவர்களுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற பரிந்துரை செய்ததை அடுத்து, டில்லி சிறப்பு நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது.இந்த வழக்கின் இறுதி விசாரணையில், சசி தரூர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விகாஸ் பஹ்வா ஆஜரானார். அரசு தரப்பில் அனுல் ஸ்ரீவஸ்தவா ஆஜரானார்.

சசி தரூர் வழக்கறிஞர் பஹ்வா கூறியதாவது:சுனந்தா புஷ்கர் மரணத்தில் சசி தரூர் மீதான எந்த குற்றச்சாட்டுக்கும் அரசு தரப்பில் ஆதாரங்களை தாக்கல் செய்ய முடியவில்லை. சுனந்தா உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டரும், அவரின் உடலில் எந்த விஷமும் கலக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

அரசு தரப்பு வழக்கறிஞர் ஸ்ரீ வஸ்தவா கூறுகையில், ''இறப்பதற்கு முன் சுனந்தாவுக்கு உடலில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், மன ரீதியாக சசி தரூர் அவரை தொந்தரவு செய்துள்ளார். இது எதிர்பாராத மரணம் அல்ல,'' என்றார். இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் தீர்ப்பை, சிறப்பு நீதிமன்ற நீதிபதி கீதாஞ்சலி கோயல் ஒத்திவைத்தார்.


மிகப்பெரிய நிம்மதி

இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி கீதாஞ்சலி கோயல், ''சுனந்தா புஷ்கர் மரணத்தில் சசி தரூருக்கு தொடர்பு உள்ளதற்கான ஆதாரங்கள் நிரூபிக்கப்படவில்லை. அதனால் வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்படுகிறார்,'' என்றார்.

தீர்ப்பு குறித்து சசி தரூர் கூறியதாவது:கடந்த ஏழரை ஆண்டு காலம் நான் அனுபவித்த மன ரீதியான தொந்தரவுகளில் இருந்து விடுபட்டது, மிகப்பெரிய நிம்மதி அளிக்கிறது. மிக நீண்ட சட்டப் போராட்டத்தில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. நீதித் துறை மீது நான் வைத்திருந்த நம்பிக்கை வீண் போகவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X