தேசிய ராணுவ அகாடமி தேர்வு பாலின பாகுபாடு வேண்டாம்: சுப்ரீம் கோர்ட்

Updated : ஆக 20, 2021 | Added : ஆக 18, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி:'ராணுவத்தில் பாலின பாகுபாடு காட்டும் மனப்பான்மையை மத்திய அரசு முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும்; அடுத்த மாதம் நடக்கவுள்ள தேசிய ராணுவ அகாடமி தேர்வை எழுத பெண்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ராணுவம், கடற்படை, விமானப்படையின் பல்வேறு பிரிவுகளில் பணியில் சேர, யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்
தேசிய ராணுவ அகாடமி தேர்வு ,பெண்கள், பாலின பாகுபாடு

புதுடில்லி:'ராணுவத்தில் பாலின பாகுபாடு காட்டும் மனப்பான்மையை மத்திய அரசு முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும்; அடுத்த மாதம் நடக்கவுள்ள தேசிய ராணுவ அகாடமி தேர்வை எழுத பெண்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராணுவம், கடற்படை, விமானப்படையின் பல்வேறு பிரிவுகளில் பணியில் சேர, யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், தேசிய ராணுவ அகாடமி தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான கல்வித் தகுதி, பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வானவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு முப்படைகளில் பணியில் சேர்க்கப்படுவர். இந்த தேர்வு குறித்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவில் கூறியிருந்ததாவது:

தேசிய ராணுவ அகாடமி தேர்வு எழுத, 20 வயதுக்குட்பட்ட பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற ஆண்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது. ஆனால் இதே தகுதியுள்ள பெண்களுக்கு தேர்வு எழுத அனுமதியில்லை.ஆண் - பெண் சமத்துவத்துக்கு எதிரானதாக இந்த நடவடிக்கை உள்ளது. அதனால் இந்த ஆண்டு தேசிய ராணுவ அகாடமி தேர்வு எழுதுவதற்கு பெண்களை அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
'நோட்டீஸ்'இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசு, யு.பி.எஸ்.சி.,க்கு, 'நோட்டீஸ்' அனுப்பியது. இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதிகள் கவுல், ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டி கூறியதாவது:முப்படைகளுக்கான ஆட்கள் தேர்வில் பாலின பாகுபாடு காட்டப்படுவதில்லை. ராணுவ பணியில் சேர பல்வேறு வழிகளில் பெண்கள் விண்ணப்பிக்கலாம். தேசிய ராணுவ அகாடமி தேர்வில் தேர்வானவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி சற்று வித்தியாசமானது. நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. அதனால் இதில் பெண்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ராணுவத்தில் பாலின பாகுபாடு காட்டக் கூடாது என உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் உறுதிபட தெரிவித்துள்ளது.'ராணுவத்தில் ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். பெண் அதிகாரிகளுக்கு மூன்று மாதங்களுக்குள் நிரந்தர ஆணையம் அமைக்க வேண்டும்' என, கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆனால் ஆணையம் அமைக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ராணுவத்தில் பணியாற்றிய பல பெண்கள் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர். ஐ.நா., அமைதி காக்கும் படை உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பெண்கள் சிறப்பாக பணியாற்றி உள்ளனர். எனவே, 'ராணுவத்தில் பெண்களுக்கு பாகுபாடு காட்டும் மனப்பான்மையை மத்திய அரசு மாற்றிக் கொள்ள வேண்டும். 'ராணுவத்தில் ஆண்கள், பெண்கள் என அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தெரிவித்தது.


விருப்பம்மத்திய அரசின் மனப்பான்மை சிறிதும் மாறவில்லை என்பதே தேசிய ராணுவ அகாடமி தேர்வு எழுத, பெண்களுக்கு அனுமதி மறுப்பதிலிருந்து தெரிகிறது. பாலின பாகுபாடு காட்டப்படுவதை சிறிதும் ஏற்க முடியாது. இந்த விவகாரத்தில் ராணுவம் தானாக மாற வேண்டும் என விரும்புகிறோம்.நாங்கள் உத்தரவுகள் பிறப்பித்து, வலுக்கட்டாயமாக மாற வேண்டிய நிலைக்கு உள்ளாக்க வேண்டாம் என, கேட்டுக் கொள்கிறோம்.அடுத்த மாதம் 5ல் நடக்க உள்ள தேசிய ராணுவ அகாடமி தேர்வை எழுத பெண்களை அனுமதிக்க வேண்டும் என உத்தரவிடுகிறோம். இந்த உத்தரவு முறையாக செயல்படுத்தப்படும் என நம்புகிறோம். இந்த வழக்கின் இறுதி விசாரணை அடுத்த மாதம் 8க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


பெண் அதிகாரிகள் மகிழ்ச்சிஉச்ச நீதிமன்ற உத்தரவு பற்றி ராணுவத்தில் பணியாற்றும் பெண் அதிகாரி ஒருவர் கூறியதாவது:ராணுவத்தில் ஆண் - பெண் பாகுபாடு காட்டக் கூடாது என உச்ச நீதிமன்றம் பலமுறை தெரிவித்துள்ளது. ஆனாலும், பாகுபாடு காட்டப்படுகிறது. தேசிய ராணுவ அகாடமி தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டதன் வாயிலாக, ராணுவத்தில் பெண்கள் அதிகளவில் சேர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு படைப் பிரிவுக்கு தலைமை தாங்குவதற்கு ஆண்களுக்கு எவ்வாறு பயிற்சி அளிக்கப்படுகிறதோ, அதே போன்ற பயிற்சியை பெண்களுக்கும் அளித்து, அவர்கள் தகுதி பெற்றால்
உயர் பதவியை அவர்களுக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
19-ஆக-202119:51:55 IST Report Abuse
sankaseshan SC always late in reading development. Govt has already instructed NDA to admit women also on the basis of performance .
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
19-ஆக-202118:28:11 IST Report Abuse
Natarajan Ramanathan அவர்கள் நன்கு பயிற்சி பெற்றவுடன் சியாச்சின் போன்ற இடங்களுக்கும் பணி செய்ய அனுப்ப வேண்டும். அதில் மட்டும் பாலின‌பாகுபாடு கூடவே கூடாது....
Rate this:
Cancel
19-ஆக-202113:24:17 IST Report Abuse
தேச பக்தன் சட்டத்தினால் மட்டும் அனைத்தையும் சரிசெய்துவிட முடியாது. ஒரே சட்டத்தை எல்லாச் சூழலுக்கும் பயன்படுத்த முடியாது. எம்ஜிஆர் அவர்களின் ஒரு பட பாடல் உண்டு திட்டம்போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்கும் அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் படுத்துக் கொண்டே இருக்கும் ஆனால் திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. இந்தப் பாடல் சட்டத்தினால் அனைத்தையும் செய்துவிடமுடியாது என்பதைத்தான் குறிப்பிடுகிறது. பெண்கள் சமுதாயத்தில் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பதில் எந்தப் பாகுபாடும் இல்லை. ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒரு எல்லை உண்டு பெண்களுக்கு ராணுவத்தில் பணியாற்றுகின்ற உடல் வலிமை உள்ளதா என்பதை தீர்மானிக்க வேண்டும். நமது ராணுவத்தின் உயர் அதிகாரிகளிடம் இதுபற்றி ஆலோசித்து பின் முடிவு எடுக்கலாம். ராணுவ அதிகாரிகளின் முடிவுக்கு நாம் கட்டுப்பட வேண்டும். நிறைய விஷயங்களில் கோர்ட் அரசுக்கு எதிராக உத்தரவிடுவதை பார்க்கும் பொழுது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விட கோர்ட் அதிக அதிகாரம் உள்ளதாக தெரிகிறது அப்படி என்றால் நம் தேசத்தை ஜனநாயக தேசம் என்று அழைப்பது சரியானதா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X