நீதிபதிக்கு கொலை மிரட்டல்

Added : ஆக 18, 2021
Share
Advertisement
கோட்டா:ராஜஸ்தானில், மாவட்ட செஷன்ஸ் நீதிபதி ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்., ஆட்சி அமைந்துள்ளது. இங்கு, பூண்டி மாவட்ட செஷன்ஸ் நீதிபதி சுதிர் பரிக்கிற்கு சமீபத்தில் ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:நீதிபதி அவர்களே,

கோட்டா:ராஜஸ்தானில், மாவட்ட செஷன்ஸ் நீதிபதி ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்., ஆட்சி அமைந்துள்ளது. இங்கு, பூண்டி மாவட்ட செஷன்ஸ் நீதிபதி சுதிர் பரிக்கிற்கு சமீபத்தில் ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:நீதிபதி அவர்களே, செப்., 13ம் தேதி உங்களைக் கொலை செய்வோம். முடிந்தால் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். நிச்சயம் உங்களால் அது முடியாது.

உங்களிடம் இருந்து நீதியை எதிர்பார்க்க முடியாது என்பதால், 'மாபியா' உதவியுடன் உங்களை கொல்ல முடிவு செய்துள்ளோம்.உங்கள் வீட்டை வெடிகுண்டுகளால் தகர்க்க திட்டமிட்டோம். உங்கள் குடும்பத்தினர் எங்களுக்கு எந்த தீமையும் செய்யவில்லை என்பதால் அந்த முடிவை மாற்றிக்கொண்டோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நீதிபதி கொடுத்த புகாரை அடுத்து, அவருக்கு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ள போலீசார், கடிதம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஜார்க்கண்டின் தன்பாத்தில், கடந்த மாதம் நீதிபதி ஒருவர் ஆட்டோ மோதி கொல்லப்பட்டார். இதையடுத்து, 'நீதிபதிகளின் பாதுகாப்பில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.இந்நிலையில் மற்றொரு நீதிபதிக்கு வந்துள்ள கொலை மிரட்டல் கடிதம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X