போன் ஒட்டு கேட்பு விவகாரம்: சிதம்பரம் பரபரப்பு குற்றச்சாட்டு

Updated : ஆக 20, 2021 | Added : ஆக 18, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
புதுடில்லி :''போன் ஒட்டு கேட்கப்பட்டதை மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது,'' என, காங்., மூத்த தலைவர் சிதம்பரம் கூறியுள்ளார். அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட இந்தியர்களின் போன் பேச்சுக்கள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.இதில் நீதிமன்ற விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.வழக்கின்
போன் ஒட்டு கேட்பு , சிதம்பரம் பரபரப்பு குற்றச்சாட்டு

புதுடில்லி :''போன் ஒட்டு கேட்கப்பட்டதை மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது,'' என, காங்., மூத்த தலைவர் சிதம்பரம் கூறியுள்ளார்.

அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட இந்தியர்களின் போன் பேச்சுக்கள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.இதில் நீதிமன்ற விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.வழக்கின் விசாரணையின்போது, 'இந்த விவகாரம் தொடர்பான தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்க முடியாது. அது, நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக அமைந்துவிடும்' என, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்திருந்தார்.இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்க முடியாது என கூறியுள்ளதன் வாயிலாக, போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்டுள்ளதை மத்திய அரசு ஒப்புக் கொண்டு உள்ளது.மேற்காசிய நாடான இஸ்ரேலின், 'பெகாசஸ்' உளவு மென்பொருள், யாரை உளவு பார்க்க வாங்கப்பட்டது என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். உச்ச நீதிமன்றமும் இந்தக் கேள்வியை எழுப்பும் என நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விசாரணையை எதிர்த்து வழக்குபோன் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக விசாரணைக் குழுவை அமைத்து, திரிணமுல் காங்., தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் லோகுர், கோல்கட்டா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜோதிர்மயி பட்டாச்சார்யா ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்று உள்ளனர்.'இவ்வாறு விசாரணைக் குழு அமைப்பதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை' என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு, 25ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vadivelu - thenkaasi,யூ.எஸ்.ஏ
19-ஆக-202120:30:05 IST Report Abuse
vadivelu பெரியார் சொன்னதில் கடவுள் இல்லை என்பது உண்மையாக இருக்கலாம்.தவறு செய்பவன் எவனுக்கும் வெட்கம் இல்லை, தண்டனையும் இல்லை.
Rate this:
Cancel
Devanathan Govindarajan - Chennai,இந்தியா
19-ஆக-202120:16:17 IST Report Abuse
Devanathan Govindarajan I think he has forgotten what he did during union minister and how he tortured the officers and others we must ignore him as human beings
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
19-ஆக-202120:03:53 IST Report Abuse
J. G. Muthuraj ப.சி அவர்கள் இரண்டும் மாதங்களாகவே மென்பொருள் பிரச்னையில் தான் உழன்றுகொண்டு இருக்கிறார்.....தமிழ்நாடு பட்ஜெட்டை அலசி ஆராய்ந்து, தம்பி PTR க்கு நல்ல ஆலோசனைகளை கொடுக்கலாமே?.....ஹார்வர்டும், நியூ யார்க்கும் பொருளாதாரத்தைப் பற்றி சம்சாரிக்கிறதை மக்கள் பார்க்கட்டும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X