பாக்., கல்லுாரியில் சீட்: 4 பேர் கைது| Dinamalar

பாக்., கல்லுாரியில் சீட்: 4 பேர் கைது

Added : ஆக 18, 2021 | கருத்துகள் (1)
Share
ஸ்ரீநகர்:பாகிஸ்தான் மருத்துவக் கல்லுாரிகளில், ஜம்மு - காஷ்மீர் மாணவர்களுக்கு ஹூரியத் அமைப்பு வாயிலாக, 'சீட்' வாங்கிக் கொடுத்த நான்கு பேரை போலீசார் நேற்று செய்தனர்.ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு பிரிவினரும், யூனியன் பிரதேச போலீசாரும் கவனம் செலுத்தி வருகின்றனர். கடந்த காலங்களில் பிரிவினைவாதிகளின்

ஸ்ரீநகர்:பாகிஸ்தான் மருத்துவக் கல்லுாரிகளில், ஜம்மு - காஷ்மீர் மாணவர்களுக்கு ஹூரியத் அமைப்பு வாயிலாக, 'சீட்' வாங்கிக் கொடுத்த நான்கு பேரை போலீசார் நேற்று செய்தனர்.

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு பிரிவினரும், யூனியன் பிரதேச போலீசாரும் கவனம் செலுத்தி வருகின்றனர். கடந்த காலங்களில் பிரிவினைவாதிகளின் உதவியுடன் ஜம்மு - காஷ்மீர் மாணவர்கள் பாகிஸ்தானுக்கு சென்று எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளை படித்து வந்தனர்.

பாக்.,கிற்கு மாணவர்களை படிக்க அனுப்பும் பிரிவினைவாதிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இது, பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்யும் ஒரு விதமான முறையாக பார்க்கப்படுகிறது.இந்நிலையில், பாக்., மருத்துவக் கல்லுாரிகளில் ஜம்மு - காஷ்மீர் மாணவர்களுக்கு சீட் வாங்கிக் கொடுத்த நான்கு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இவர்கள் நான்கு பேரும் ஹூரியத் அமைப்பு வாயிலாக மாணவர்களுக்கு சீட் வாங்கிக்கொடுத்தது அம்பலமாகி உள்ளது. பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி பெற்று, அதற்கு பதிலாக மாணவர்களுக்கு சீட் வாங்கித் தந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X