35 நாட்களில் 44 விமான சேவைகள் ம.பி.,க்கு பரிசளித்த மத்திய அமைச்சர்

Added : ஆக 18, 2021
Share
Advertisement
சொந்த மாநிலமான மத்திய பிரதேசத்திற்கு, கடந்த 35 நாட்களுக்குள் மட்டும் 44 புதிய விமான சேவைகளை அனுமதித்துள்ளதாக அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பெருமிதம் தெரிவித்துள்ளார்.காங்கிரசில் பல ஆண்டுகளாக இருந்து வந்த ஜோதிராதித்ய சிந்தியா, ம.பி., மாநில முதல்வராக இருந்த கமல்நாத்துக்கு எதிரான கோஷ்டி சண்டையில் அக்கட்சியிலிருந்து விலகினார்.கடந்த ஆண்டு பா.ஜ.,வுக்கு தாவிய அவர்,

சொந்த மாநிலமான மத்திய பிரதேசத்திற்கு, கடந்த 35 நாட்களுக்குள் மட்டும் 44 புதிய விமான சேவைகளை அனுமதித்துள்ளதாக அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

காங்கிரசில் பல ஆண்டுகளாக இருந்து வந்த ஜோதிராதித்ய சிந்தியா, ம.பி., மாநில முதல்வராக இருந்த கமல்நாத்துக்கு எதிரான கோஷ்டி சண்டையில் அக்கட்சியிலிருந்து விலகினார்.கடந்த ஆண்டு பா.ஜ.,வுக்கு தாவிய அவர், ராஜ்யசபா எம்.பி.,யாக்கப்பட்டார். கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது.

அதில், சிவில் விமான போக்குவரத்து அமைச்சராக ஜோதிராதித்ய சிந்தியா பொறுப்பேற்றார். இந்நிலையில் தன் சொந்த மாநிலமான மத்திய பிரதேசத்துக்கு மிகப்பெரிய பரிசை சிந்தியா, வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

கடந்த 35 நாட்களில், 44 புதிய விமான சேவைகளை மத்திய பிரதேசத்துக்கு வழங்கியுள்ளதில் பெருமைப்படுகிறேன். ம.பி., நகரங்களில் இருந்து நாட்டின் பிற நகரங்களுக்கும், அந்த நகரங்களில் இருந்து ம.பி.,க்கும் இந்த புதிய விமானங்கள் இயங்குகின்றன. பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அதை காப்பாற்றும் வகையில் சிறப்பாக செயல்படுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது டில்லி நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X