முன்பை விட வேகமாக மத்திய அரசை எதிர்ப்போம்!| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'முன்பை விட வேகமாக மத்திய அரசை எதிர்ப்போம்!'

Updated : ஆக 18, 2021 | Added : ஆக 18, 2021
Share
''மத்திய அரசு மீது, எங்களுக்கு எந்த காழ்ப்புணர்வும் இல்லை. அவர்கள் நல்லது செய்தால் பாராட்ட தயாராக உள்ளோம். ஆனால், தவறிழைக்கும் பட்சத்தில், முன்பை விட இன்னும் வேகமாக, அதை சுட்டிக்காட்டி விமர்சிப்போம்,'' என, தி.மு.க., - எம்.எல்.ஏ., உதயநிதி தெரிவித்தார்.சட்டசபையில் அவர் பேசியதாவது:மத்திய அரசின் மீது எங்களுக்கு எந்த காழ்ப்புணர்வும் இல்லை. அவர்கள் நல்லதுசெய்தால் அதை

''மத்திய அரசு மீது, எங்களுக்கு எந்த காழ்ப்புணர்வும் இல்லை. அவர்கள் நல்லது செய்தால் பாராட்ட தயாராக உள்ளோம். ஆனால், தவறிழைக்கும் பட்சத்தில், முன்பை விட இன்னும் வேகமாக, அதை சுட்டிக்காட்டி விமர்சிப்போம்,'' என, தி.மு.க., - எம்.எல்.ஏ., உதயநிதி தெரிவித்தார்.

சட்டசபையில் அவர் பேசியதாவது:மத்திய அரசின் மீது எங்களுக்கு எந்த காழ்ப்புணர்வும் இல்லை. அவர்கள் நல்லதுசெய்தால் அதை ஏற்கவும், பாராட்டவும் தயாராக உள்ளோம். ஆனால் தவறிழைக்கும் பட்சத்தில் முன்பை விட இன்னும் வேகமாக அதை சுட்டி காட்டுவோம்; விமர்சிப்போம். முதல்வர், எங்களை கண்ணியமாக நடந்து கொள்ள சொல்லியிருக்கிறாரே தவிர, அடிமையாக இருக்க சொல்லவில்லை.இவ்வாறு அவர் பேசினார்.


இந்த தொடரிலேயே 'நீட்' தேர்வு ரத்துக்கான மசோதா


தி.மு.க., - உதயநிதி: தி.மு.க., ஆட்சியில் முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டவர்களுக்கு, அ.தி.மு.க., ஆட்சியில் நிறுத்தப்பட்டுள்ளது. கைவிடப்பட்ட நிலையில் தவிக்கும் முதியோருக்கு, மீண்டும் உதவித் தொகை வழங்க வேண்டும்.
அனிதாவில் துவங்கி, 14 மாணவ - மாணவியர், 'நீட்' தேர்வால் தற்கொலை செய்துள்ளனர். பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர், நீட் தேர்வு வேண்டாம் என்றனர். 'நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என, முதல்வர் தேர்தல் வாக்குறுதி தந்திருந்தார். நாம் எல்லாரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, நீட் தேர்வை ரத்து செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். நீட் தேர்வு ரத்து என்பதை, ஒரு இயக்கமாக முன்னெடுக்க வேண்டும்.
அரியலுாரில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லுாரிக்கு, அனிதா பெயரை சூட்ட வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக, தமிழகம் முழுதும் போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் மீது, கடந்த ஆட்சியில் பதியப்பட்ட, அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின்: நீட் பிரச்னையில் கட்சி பாகுபாடுகளை எல்லாம் மறந்து, அனைவரும் ஒன்று சேர்ந்து, அதற்காக குரல் கொடுக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். ஆட்சிக்கு வந்தவுடனே, இது தொடர்பாக அலசி ஆராய, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், குழு அமைக்கப்பட்டது. அவரும் பணியை நிறைவேற்றி, அரசுக்கு அறிக்கை அளித்துள்ளார்.

அந்த அறிக்கை சட்டரீதியாக பரிசீலிக்கப்பட்டு, இந்த கூட்டத் தொடரிலேயே நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்ட முன்வடிவு கொண்டு வரப்படும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X