அரசியல் செய்தி

தமிழ்நாடு

பெருமையின் அடையாளமாக அரசு பள்ளிகளை உயர்த்துவோம்!

Updated : ஆக 20, 2021 | Added : ஆக 18, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
சென்னை:''அரசு பள்ளிகளை, வறுமையின் அடையாளமாக அல்லாமல், பெருமையின் அடையாளமாக உயர்த்திக்காட்டுவோம்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் கூறினார்.அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து நேற்று விவாதம் நடந்தது.கல்விக்கு கூடுதல் நிதிபா.ம.க., - ஜி.கே.மணி: மாநிலம், நிதி நெருக்கடியில் உள்ளது. இருப்பினும் மாநிலத்தை முதலிடத்திற்கு
பெருமை, அடையாளம்,  அரசு பள்ளிகள், உயர்த்துவோம்!

சென்னை:''அரசு பள்ளிகளை, வறுமையின் அடையாளமாக அல்லாமல், பெருமையின் அடையாளமாக உயர்த்திக்காட்டுவோம்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் கூறினார்.

அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து நேற்று விவாதம் நடந்தது.


கல்விக்கு கூடுதல் நிதி

பா.ம.க., - ஜி.கே.மணி: மாநிலம், நிதி நெருக்கடியில் உள்ளது. இருப்பினும் மாநிலத்தை முதலிடத்திற்கு கொண்டு செல்வதாகக் கூறியுள்ளீர்கள். கல்வியில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவித்து உள்ளீர்கள். ஆனால், 10 அரசு கல்லுாரிகள் மட்டுமே துவங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக அரசு கல்லுாரிகளை துவங்க வேண்டும். பள்ளிக் கல்வித் துறைக்கு பட்ஜெட்டில் 32 ஆயிரத்து 599 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் 34 ஆயிரத்து 181 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. அதை விட குறைவாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, கல்வித் துறைக்கு கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும்.

தி.மு.க., - கிருஷ்ணசாமி: பல அரசு பள்ளிகளின் தரம் குறைவாக உள்ளது. மாதிரி பள்ளிகளை உருவாக்கப் போவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு பள்ளிகளுக்கு நிதியை அதிகரித்து, உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். தனியார் மற்றும் மத்திய அரசின் பள்ளிகளுக்கு இணையாக, மாநில அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ்: இது, ஆறு மாதங்களுக்கான பட்ஜெட் என, நிதி அமைச்சர் ஏற்கனவே கூறியுள்ளார். அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, அடுத்தாண்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி என்பது,அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் 30 சதவீதம் வரும். இதற்கு மட்டும் 3,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.


உறுதி

இந்த நிதியையும் சேர்த்தால், பட்ஜெட்டில் கல்வித் துறைக்கான ஒதுக்கீடு 35 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். கல்வித் துறைக்கு இரண்டு ஆண்டுகளில் கூடுதல் நிதி ஒதுக்குவதாக, நிதி அமைச்சர் கூறியுள்ளார். அரசு பள்ளிகளை மாதிரி பள்ளிகளாக மாற்றுவதில் முதல்வர் உறுதியாக உள்ளார். எனவே அரசு பள்ளிகளை, வறுமையின் அடையாளமாக அல்லாமல், பெருமையின் அடையாளமாக உயர்த்திக் காட்டுவோம்.இவ்வாறு அமைச்சர் மகேஷ் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
21-ஆக-202104:16:55 IST Report Abuse
meenakshisundaram நிதி அமைச்சருக்கு ஒரு ஐடியா .அடுத்தபடியா இன்னொன்னுளே கையை வைக்கலாம் -அரசு ஊழியர்கள் .மற்றும் ஆசிரியர்கள் ஆகிய எல்லோராய்யும் டிஸ்மிஸ் செய்யவும் -இதுவே சமூக நீதி.பஞ்சப்படி உயர்வு கேட்கும் அவர்களை தினசரி சம்பளத்தில் அமர்த்தினாலேயே நீங்கள் நினைக்கும் வண்ணம் ஒரு மூன்று வருஷத்தில் நிதி நிலையை சரி செய்யலாம் .ஹிந்து கோவில்களை எப்படி ஒழிக்க வேணும்னு நினைக்கிறீர்களோ அதே போல அடுத்தது கல்வி துரையின் மேலும் கையை வைத்தாலே போதும் -தமிழகம் முதன்மை மாநிலமாகி விடும் .ராமசாமி நாயக்கன் .முக நெஞ்சிலே 'திட்டத்தை முட்களை எடுக்க ஸ்டாலினுக்கு உரு துணையாக இருக்கவும்.அதற்கேற்ப முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துள்ளவர் 'போஸ்டிங் கும் போட்டுள்ளார்
Rate this:
Cancel
adalarasan - chennai,இந்தியா
19-ஆக-202122:19:42 IST Report Abuse
adalarasan வரவேற்கிறோம்கைதட்டுகிறோம்.செய்யுங்கள்முன்னோடியாக, அரசியல்வாதிகள்,பதவியில் இருப்பார்கள், தங்கள், பிள்ளைகளை அரசாக பள்லியில் ,சேர்க்க ஆரம்பியுங்கள்பிறகு பாருங்கள், எப்படி முன்னேற்றம் என்று?
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
19-ஆக-202118:39:57 IST Report Abuse
Natarajan Ramanathan பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேசு தனது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்து விட்டாரா இல்லையா??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X