அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு நடக்கிறது'

Added : ஆக 18, 2021
Share
Advertisement
பா.ம.க., - ஜி.கே.மணி: திண்டிவனம் முதல் திருவண்ணாமலை, செங்கம், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி வரை செல்லும் சாலை, பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக உள்ளது. இரண்டு அமைச்சர்களுக்கு இது தெரியும். இந்த சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலு: அது மாநில அரசின் சாலை அல்ல; தேசிய நெடுஞ் சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது. இருப்பினும், மத்திய சாலை

பா.ம.க., - ஜி.கே.மணி: திண்டிவனம் முதல் திருவண்ணாமலை, செங்கம், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி வரை செல்லும் சாலை, பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக உள்ளது. இரண்டு அமைச்சர்களுக்கு இது தெரியும். இந்த சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலு: அது மாநில அரசின் சாலை அல்ல; தேசிய நெடுஞ் சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது. இருப்பினும், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரிக்கு, இது குறித்து இரண்டு முறை கடிதம் எழுதினோம். சாலை சீரமைப்பு பணிக்கு ஏற்கனவே மூன்று ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டும், அவர்கள் வேலை செய்யவில்லை. தற்போது, புதிதாக ஒப்பந்ததாரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சாலை பணியை மேற்கொள்ள கிராவல், ஜல்லி, தண்ணீர் வழங்க வேண்டும் என, முதல்வருக்கு அவர் கடிதம் எழுதிஉள்ளார்.இது குறித்து, தலைமை செயலரிடம் முதல்வர் கூறியுள்ளார். மாவட்ட கலெக்டர் வாயிலாக அரசு எடுத்த நடவடிக்கையால், தற்போது சாலை சீரமைப்பு பணி நடந்து வருகிறது. என் ஊரும், இந்த சாலையில் தான் வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X