பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி திறப்புக்கு தயாராகும் அரசு வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

Added : ஆக 18, 2021
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை, பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.கொரோனா தொற்று பரவலால், பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டு உள்ளன. இதில், மருத்துவக் கல்லுாரிகள் இம்மாதம் 16ம் தேதி முதல் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. செப்., 1 முதல், ஒன்பது முதல் பிளஸ் 2 வரை பள்ளிகளை திறக்க, அரசு

சென்னை:தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை, பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலால், பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டு உள்ளன. இதில், மருத்துவக் கல்லுாரிகள் இம்மாதம் 16ம் தேதி முதல் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. செப்., 1 முதல், ஒன்பது முதல் பிளஸ் 2 வரை பள்ளிகளை திறக்க, அரசு உத்தேசித்துள்ளது.

இந்நிலையில், பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து, சுகாதார துணை இயக்குனர்கள் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:

* பள்ளிகளில் உள்ள மேஜைகள், கேன்டீன், கழிப்பறைகள், வகுப்பறைகள், நுாலகம் என, அனைத்து பகுதிகளும் கிருமி நாசினியால் சுத்தம் செய்திருக்க வேண்டும்

* அனைத்து பள்ளிகளிலும் கிருமி நாசினி, கை கழுவ தண்ணீர் உள்ளிட்டவை ஏற்பாடு செய்திருக்க வேண்டும். பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்திருப்பதை, பள்ளி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்
* பள்ளிக்கு வரும் மாணவர்களை, வெப்ப பரிசோதனைக்கு பின், வளாகத்தில் அனுமதிக்க வேண்டும். கொரோனா அறிகுறி உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கக் கூடாது; அவர்களை உடனடியாக ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். இதற்காக, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார் நிலையில் இருத்தல் அவசியம்
* மாணவர்களுக்கு, 'விட்டமின் - சி' போன்ற சத்து மாத்திரை மற்றும் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்க தேவையானவற்றை வழங்க வேண்டும்l அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.
* ஒரு வகுப்பறையில் ஒரே நேரத்தில், 50 சதவீத மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்; ஒவ்வொரு மாணவருக்கும் இடையே, 6 அடி இடைவெளி அவசியம்

* ஒவ்வொரு நாளும் பள்ளி வாகனங்கள் எடுப்பதற்கு முன், கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். ஆசிரியர்கள் அறை, அலுவலக அறை போன்ற பகுதிகளிலும் சமூக இடைவெளியுடன் அமர வேண்டும்

* பள்ளியில் கழிப்பறைக்கு வெளியே, கை கழுவும் இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றி வட்டம் போடப்பட்டிருக்க வேண்டும். பள்ளிகளில் கூட்டங்கள், நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தக் கூடாது.
* கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்l வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை, சுகாதார ஆய்வாளர்கள் கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X