அரசியல் செய்தி

தமிழ்நாடு

'கோவாக்சின்' தடுப்பூசிக்காக காத்திருக்கும் 4 லட்சம் பேர்

Added : ஆக 18, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:''கோவாக்சின் முதல் தவணை தடுப்பூசி போட்டு, நான்கு லட்சம் பேர், இரண்டாம் தவணை தடுப்பூசிக்காக காத்திருக்கின்றனர்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.சென்னை, கிண்டி கிங் கொரோனா அரசு மருத்துவமனைக்கு, எஸ்.கே.சி.எஸ்., நிறுவனம் சார்பில், 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பேட்டரி கார் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற, அமைச்சர் சுப்பிரமணியன்
 'கோவாக்சின்' தடுப்பூசிக்காக காத்திருக்கும் 4 லட்சம் பேர்

சென்னை:''கோவாக்சின் முதல் தவணை தடுப்பூசி போட்டு, நான்கு லட்சம் பேர், இரண்டாம் தவணை தடுப்பூசிக்காக காத்திருக்கின்றனர்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை, கிண்டி கிங் கொரோனா அரசு மருத்துவமனைக்கு, எஸ்.கே.சி.எஸ்., நிறுவனம் சார்பில், 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பேட்டரி கார் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற, அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:கிண்டி கொரோனா மைய வளாகத்தில், 250 கோடி ரூபாய் மதிப்பில், பல்நோக்கு மருத்துவமனை விரைவில் அமைக்கப்பட உள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில், இதுவரை 1.28 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர்.

கோவாக்சின் முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டு, 28வது நாளில் இரண்டாம் தவணை போட வேண்டும்;இரண்டாம் தவணை தடுப்பூசிக்காக, நான்கு லட்சம் பேர் காத்திருக்கின்றனர். தடுப்பூசி கையிருப்பு குறைவு குறித்து, மத்திய அரசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி கிடைத்ததும், காத்திருப்போருக்கு முன்னுரிமை கொடுத்து, தடுப்பூசி செலுத்தப்படும்.

கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி போட்டோர், இரண்டாம் தவணை போட, 84 நாட்கள் அவகாசம் உள்ளது. இதனால், முறையாக போடப்பட்டு வருகிறது.டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரசை கண்டறியும் ஆய்வகம், சென்னை டி.எம்.எஸ்., வளாகத்தில், திறக்கப்பட உள்ளது. இதற்காக, 3 கோடி ரூபாய் மதிப்பிலான பகுப்பாய்வு கூடத்தை, முதல்வர் திறந்து வைக்க உள்ளார்.

இந்த ஆய்வகத்தில் பணியாற்றுவோர், பெங்களூரு ஆய்வகத்தில் பயிற்சி பெற்று திரும்பியுள்ளனர்.தமிழகத்தில் கொரோனா தொற்று, 1.2 என்ற விகித்தில் தான் உள்ளது; பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழகத்தில், 2.70 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.மத்திய அரசிடமிருந்து, இந்த மாதத்திற்கு மேலும் 27 லட்சம் தடுப்பூசிகள் வர வேண்டியுள்ளது. சட்டசபை கூட்டம் முடிந்தபின், ஒப்பந்த நர்ஸ்கள் பணி நிரந்தரம் குறித்து ஆலோசிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
19-ஆக-202116:26:43 IST Report Abuse
DVRR 8.2 கோடி டாஸ்மாக்கினாட்டு ஜனத்தொகையில் வெறும் 4 லட்சம் பேர் தான் காத்திருப்பு பேஷ் பேஷ்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X