பொது செய்தி

இந்தியா

வடிகால் வாய்க்கால் சீரமைப்பு

Added : ஆக 18, 2021
Share
Advertisement
வில்லியனுார்: வில்லியனுாரில் மிகவும் குறுகலாக அமைத்த கழிவுநீர் வாய்க்காலை, நமது நாளிதழ் செய்தி எதிரொலியால், அகலப்படுத்தும் பணி துவங்கியது.வில்லியனுாரில், பொதுப்பணித் துறை கட்டடம் மற்றும் சாலை வடக்கு கோட்டம் சார்பில், ரூ. 50 லட்சம் செலவில், வடிகால் வாய்க்கால் கட்டும் பணி நடந்து வருகிறது.இதில், கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் அருகே, மின் கம்பத்தை அகற்றி முழுமையான
 வடிகால் வாய்க்கால் சீரமைப்பு

வில்லியனுார்: வில்லியனுாரில் மிகவும் குறுகலாக அமைத்த கழிவுநீர் வாய்க்காலை, நமது நாளிதழ் செய்தி எதிரொலியால், அகலப்படுத்தும் பணி துவங்கியது.

வில்லியனுாரில், பொதுப்பணித் துறை கட்டடம் மற்றும் சாலை வடக்கு கோட்டம் சார்பில், ரூ. 50 லட்சம் செலவில், வடிகால் வாய்க்கால் கட்டும் பணி நடந்து வருகிறது.இதில், கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் அருகே, மின் கம்பத்தை அகற்றி முழுமையான வாய்க்கால் அமைக்காமல், முக்கால் அடி அகலத்திற்கு மிகவும் குறுகலாக வாய்க்கால் அமைத்தனர்.

இதனால் மழை காலங்களில் தண்ணீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப் பட்டது.இந்நிலையில், அதிகாரிகளின் உத்தரவின்பேரில், முக்கால் அடி அகலத்தில் அமைக்கப்பட்ட கழிவுநீர் வாய்க்காலை, இரண்டரை அடி அகலத்திற்கு மாற்றி அமைக்கும் பணி துவக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X