பொது செய்தி

தமிழ்நாடு

தமிழிசையின் தாய் மரணம் சென்னையில் இன்று அடக்கம்

Added : ஆக 18, 2021
Share
Advertisement
சென்னை:தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனின் தாய் கிருஷ்ணகுமாரி, 78, உடல் நலக்குறைவால் ஐதராபாதில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று காலமானார். தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனின் தாய் கிருஷ்ணகுமாரி. தெலுங்கானா தலைநகர் ஐதராபாதில் உள்ள கவர்னர் மாளிகையில், மகளுடன் வசித்து வந்தார்.உடல் நலக்குறைவால்
 தமிழிசையின் தாய் மரணம் சென்னையில் இன்று அடக்கம்

சென்னை:தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனின் தாய் கிருஷ்ணகுமாரி, 78, உடல் நலக்குறைவால் ஐதராபாதில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று காலமானார்.

தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனின் தாய் கிருஷ்ணகுமாரி. தெலுங்கானா தலைநகர் ஐதராபாதில் உள்ள கவர்னர் மாளிகையில், மகளுடன் வசித்து வந்தார்.உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் அங்கு காலமானார்.

கிருஷ்ணகுமாரியின் கணவர், மூத்த காங்., தலைவர் குமரி அனந்தன். இவருக்கு சென்னையில் வீடு இல்லாததால், கிருஷ்ணகுமாரியின் உடல் விமானம் வாயிலாக, சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு கிருஷ்ணகுமாரி உடலுக்கு, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கிருஷ்ணகுமாரிக்கு, தமிழிசை, அமுதா, தாமரை, ஞானசவுந்தரி என்ற நான்கு மகள்களும், கீதன் என்ற ஒரு மகனும் உள்ளனர். கிருஷ்ணகுமாரி உடல் இன்று, சென்னை வடபழநியில் உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.கிருஷ்ணகுமாரியின் மறைவுக்கு, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, - அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி. த.மா.கா., தலைவர் வாசன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X