அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தி.மு.க., பொய் வழக்கு ஜோடிக்கிறது : பழனிசாமி

Updated : ஆக 20, 2021 | Added : ஆக 18, 2021 | கருத்துகள் (24+ 42)
Share
Advertisement
சென்னை : சட்டசபை வளாகத்தில், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி அளித்த பேட்டி: கோடநாடு இல்லத்தில், சயன் மற்றும் அவரது கூலிப்படையை சேர்ந்தவர்கள், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். தடுத்த காவலாளி கொலை செய்யப்பட்டார். வழக்கு நீதிமன்றத்தில் முடியும் நிலையில், தி.மு.க., அரசு வேண்டுமென்றே, சயனுக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து, அவரிடம் ரகசிய வாக்குமூலம் பெற்றுள்ளது.அந்த
 தி.மு.க., பொய் வழக்கு ஜோடிக்கிறது

சென்னை : சட்டசபை வளாகத்தில், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி அளித்த பேட்டி: கோடநாடு இல்லத்தில், சயன் மற்றும் அவரது கூலிப்படையை சேர்ந்தவர்கள், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். தடுத்த காவலாளி கொலை செய்யப்பட்டார்.

வழக்கு நீதிமன்றத்தில் முடியும் நிலையில், தி.மு.க., அரசு வேண்டுமென்றே, சயனுக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து, அவரிடம் ரகசிய வாக்குமூலம் பெற்றுள்ளது.அந்த வாக்குமூலத்தில், என்னையும், அ.தி.மு.க., பொறுப்பாளர்கள் சிலரையும் சேர்த்துள்ளதாக, செய்திகள் வந்துள்ளன. இதை வன்மையாக கண்டிக்கிறோம். தி.மு.க., அரசு வேண்டுமென்றே, அ.தி.மு.க., தலைவர்கள் மீது வழக்கு போட்டு அச்சுறுத்தி, அரசியல் ஆதாயம் தேட முயல்கிறது. அந்த வழக்கில் குற்றவாளிகளை ஜாமினில் எடுக்க, ஜாமின்தாரர்களாக இருந்தவர்களே தி.மு.க., வழக்கறிஞர்கள் தான்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், குற்றவாளிகளுக்கு வாதாடிய வழக்கறிஞர்களே, அரசு வழக்கறிஞர்களாக வருகின்றனர். அரசு தரப்பும், குற்றவாளிகளும் இணைந்து இந்த வழக்கை நடத்துகின்றனர்.
தி.மு.க., வழக்கறிஞர்கள் மறு விசாரணை கேட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தும், அதற்கு அனுமதி கிடைக்கவில்லை.
இதை மறைத்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மீது, அவதுாறு செய்தியை பரப்ப, பொய் வழக்கை ஜோடிக்கிறது. நாங்கள் எதற்கும் அஞ்சியது கிடையாது; சோதனையை தாங்குவோம்.தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல், அதை மறைக்க, மக்களை திசை திருப்ப, பொய் வழக்குகளைப் போடுகின்றனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும், மிகப்பெரிய குற்றவாளிகள். தற்போது, வழக்கில் என்னை சேர்த்திருப்பதாக கூறப்படுகிறது. திட்டமிட்டு காழ்ப்புணர்ச்சியோடு, பொய் வழக்கை ஜோடிக்கின்றனர். குற்றவாளிகளுக்கு அரசு துணைபோகிறது.இவ்வாறு பழனிசாமி கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (24+ 42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
20-ஆக-202106:48:27 IST Report Abuse
meenakshisundaram திமுக நடத்துவது .நடத்தியது நூறு நாட்கள் ஆட்சியில் -'நூறு பொய்கள் ஆட்சி'
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
19-ஆக-202116:24:46 IST Report Abuse
DVRR எப்போது தி மு க ஆட்சி கவிழ்ந்து அடுத்தமுறை அதிமுக ஆட்சிக்கு வந்தால் திமுக வினரின் கதி இதே போலத்தான் இருக்கும் . ஊழலில் ஒன்றுக்கு ஒன்று சளைத்ததில்லை
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
19-ஆக-202115:46:52 IST Report Abuse
சீனி சின்னம்மாவுக்கு தொடர்பு இருக்குன்னா கூட ஏதோ நம்புற மாதிரி இருக்கும். சம்பந்தமே இல்லாத அப்பவிகளை அரசியல் பழி வாங்குதலுக்கு இழுத்துவிட்டா, டி.வி சீரியல் மாதிரி கேஸ் இழுத்துக்கிட்டே போயிக்கிட்டு இருக்கும். திமுகவ நம்புற சயனுக்கு, கடைசில சயனைடு குப்பி கொடுத்துடுவாங்க....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X