பொது செய்தி

இந்தியா

முதுகலை வணிக படிப்புகளுக்கான பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு

Added : ஆக 18, 2021
Share
Advertisement
புதுச்சேரி: எம்.பி.ஏ., முதுகலை வணிக மேலாண்மை, பன்னாட்டு வணிக மேலாண்மை படிப்புகளில், பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வு மூலம் சேர, 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:நடப்பு 2021-22 கல்வியாண்டிற்கு, மேலாண்மை துறையின் முதுகலை வணிக மேலாண்மை, பன்னாட்டு வணிக துறையின் முதுகலை பன்னாட்டு வணிக

புதுச்சேரி: எம்.பி.ஏ., முதுகலை வணிக மேலாண்மை, பன்னாட்டு வணிக மேலாண்மை படிப்புகளில், பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வு மூலம் சேர, 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:நடப்பு 2021-22 கல்வியாண்டிற்கு, மேலாண்மை துறையின் முதுகலை வணிக மேலாண்மை, பன்னாட்டு வணிக துறையின் முதுகலை பன்னாட்டு வணிக மேலாண்மை படிப்புகளுக்கு, ஐ.ஐ.எம்., நுழைவுத் தேர்வு மூலம் சேர்க்கை நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் முன்பே பெறப்பட்டது.

தற்போது, இப்படிப்புகளுக்கு, புதுச்சேரி பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வு மூலமும் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வரும் 27ம் தேதிக்குள் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு பல்கலைக் கழக www.pondiuni.edu.in இணையத் தளத்தை காணவும்.முதலில் ஐ.ஐ.எம்., நுழைவுத் தேர்வின் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட்டு, மீதமுள்ள காலி இடங்கள், பல்கலைக்கழக நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நிரப்பப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X