இன்று புறக்கணிப்பு அ.தி.மு.க., அறிவிப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இன்று புறக்கணிப்பு அ.தி.மு.க., அறிவிப்பு

Added : ஆக 18, 2021
Share
சென்னை:''தி.மு.க., அரசின் அராஜக செயலை, நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில், சட்டசபையை நாளை புறக்கணிப்போம்,'' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை மற்றும் காவலாளி கொலை வழக்கில், முன்னாள் முதல்வர் பழனிசாமி பெயரை சேர்க்க ஆளுங்கட்சி திட்டமிடுவதாக, நேற்று சட்டசபையில் அ.தி.மு.க., குற்றம் சாட்டி வெளிநடப்பு

சென்னை:''தி.மு.க., அரசின் அராஜக செயலை, நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில், சட்டசபையை நாளை புறக்கணிப்போம்,'' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை மற்றும் காவலாளி கொலை வழக்கில், முன்னாள் முதல்வர் பழனிசாமி பெயரை சேர்க்க ஆளுங்கட்சி திட்டமிடுவதாக, நேற்று சட்டசபையில் அ.தி.மு.க., குற்றம் சாட்டி வெளிநடப்பு செய்தது.

இது குறித்து, பன்னீர்செல்வம் அளித்த பேட்டி:எதிர்க்கட்சிகளை தன் அதிகார பலத்தால், பொய் வழக்குகளை போட்டு நசுக்க வேண்டும் என்ற, தவறான கொள்கையை, தி.மு.க., அரசு கையில் எடுத்துள்ளது. இந்த அராஜக செயலை கண்டிக்கும் வகையில், பழனிசாமி சட்டசபையில் குரல் கொடுத்தார். அதற்கு உரிய வாய்ப்பு தராமல், என்ன சொல்கிறார் என்பதை கேட்காமலேயே அடுத்த நடவடிக்கைகளை எடுத்து விட்டனர்.

பொய் வழக்கு போட்டு எங்களை அச்சுறுத்தி, அ.தி.மு.க.,வை நசுக்க வேண்டும் என, தி.மு.க., அரசு செயல்படுகிறது. எந்த வழக்குகளுக்கும் நாங்கள் அஞ்ச மாட்டோம். சட்டப்படி எதிர் கொண்டு வெற்றி பெறுவோம்.தி.மு.க., அரசின் அராஜக செயலை, நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில், சட்டசபையை அ.தி.மு.க., இன்று முழுமையாக புறக்கணிக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X