30 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலம் அபகரிப்பு

Added : ஆக 18, 2021
Share
Advertisement
புதுச்சேரி: காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.30 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரிப்பதை தடுத்து நிறுத்தக் கோரி, இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.புதுச்சேரி, பாரதி வீதியில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்துசமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு சொந்தமான, 30 கோடி ரூபாய் மதிப்புள்ள இடம், ரெயின்போ நகரில் உள்ளது. இந்நிலையில், இந்த கோவில்
30 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலம் அபகரிப்பு

புதுச்சேரி: காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.30 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரிப்பதை தடுத்து நிறுத்தக் கோரி, இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுச்சேரி, பாரதி வீதியில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்துசமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு சொந்தமான, 30 கோடி ரூபாய் மதிப்புள்ள இடம், ரெயின்போ நகரில் உள்ளது. இந்நிலையில், இந்த கோவில் இடத்தை தனியார் சிலர் அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறி, இந்து முன்னணி சார்பில் காமராஜர் சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுச்சேரி பிரதேச விஸ்வகர்மா சமூக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்து முன்னணி கோட்ட செயலாளர் முருகையன் வரவேற்றார். கூட்டமைப்பின் பொதுச்செயலர் சுப்ரமணியன், இந்து முன்னணி பொருளாளர் செந்தில்முருகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.இந்து முன்னணி மாநிலத் தலைவர் சனில்குமார் கண்டன உரையாற்றினார். செயற்குழு உறுப்பினர் சிவமுத்து நன்றி கூறினார்.ஆர்ப்பாட்டத்தில், அபகரிப்பில் இருந்து கோவில் இடத்தை மீட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X