பொது செய்தி

இந்தியா

இலவச அரிசி வழங்கல்; முதல்வர் துவக்கி வைப்பு

Added : ஆக 18, 2021
Share
Advertisement
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதியில் கொரோனா கால நிவாரண இலவச அரிசி வழங்கும் பணியை முதல்வர் துவக்கி வைத்தார்.கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை மக்களுக்கு, மத்திய அரசு பிரதமர் கரீப் கல்யாண் திட்டத்தில், நபர் ஒருவருக்கு மாதம் 5 கிலோ அரிசி வழங்கி வருகிறது.இத்திட்டம் புதுச்சேரியில் சிவப்பு ரேஷன்கார்டு தாரர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கடந்த
இலவச அரிசி வழங்கல்; முதல்வர் துவக்கி வைப்பு

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதியில் கொரோனா கால நிவாரண இலவச அரிசி வழங்கும் பணியை முதல்வர் துவக்கி வைத்தார்.

கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை மக்களுக்கு, மத்திய அரசு பிரதமர் கரீப் கல்யாண் திட்டத்தில், நபர் ஒருவருக்கு மாதம் 5 கிலோ அரிசி வழங்கி வருகிறது.இத்திட்டம் புதுச்சேரியில் சிவப்பு ரேஷன்கார்டு தாரர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான அரிசி வழங்கும் பணி, நேற்று முன்தினம் துவங்கியது.நேற்று தட்டாஞ்சாவடி தொகுதி, திலாஸ்பேட்டை அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியில், இலவச அரிசி வழங்கும் பணியை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார். ஆறுமுகம் எம்.எல்.ஏ., கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X