கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தகுதி அடிப்படையில் அர்ச்சகர் நியமனம் ஐகோர்ட்டில் அறநிலைய துறை பதில்

Added : ஆக 18, 2021
Share
Advertisement
சென்னை:'உயர் நீதிமன்ற உத்தரவின் படியும், ஹிந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் படியும், தகுதி வாய்ந்த நபர்களே, கோவில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க பொதுச் செயலர் பி.எஸ்.ஆர். முத்துகுமார் தாக்கல் செய்த மனு:ஆகம விதிப்படி கோவில்களில்

சென்னை:'உயர் நீதிமன்ற உத்தரவின் படியும், ஹிந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் படியும், தகுதி வாய்ந்த நபர்களே, கோவில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க பொதுச் செயலர் பி.எஸ்.ஆர். முத்துகுமார் தாக்கல் செய்த மனு:ஆகம விதிப்படி கோவில்களில் பூஜை நடந்து வருகிறது. அந்த ஆகமங்களை பின்பற்ற, பல ஆண்டுகள் அனுபவம் வேண்டும். அவை அனைத்தும், ஓராண்டு சான்றிதழ் படிப்பில் கிடைத்து விடாது.

'அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்' என்ற அறிவிப்பு சட்ட விரோதமானது; உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. உச்ச நீதிமன்ற தீர்ப்பில், ஆகம விதிகளை பின்பற்றி தான், அர்ச்சகர்கள் நியமிக்க வேண்டும் என தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.ஆகம விதிப்படி, முறையான பயிற்சி பெறாதவர்களை நியமிப்பது தவறானது. இதற்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டது.

இதே போல, 'அனைத்து ஜாதிகளைச் சேர்ந்தவர்களும் அர்ச்சகராக நியமிக்கப்படுவர் என, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியது, ஆகம விதிகளுக்கு முரணானது. குறிப்பிட்ட பிரிவினரை மட்டுமே அர்ச்சகராக நியமிக்க வேண்டும். 'ஆகம விதிகளை மீறி, தமிழில் அர்ச்சனை செய்யக் கூடாது' என தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, ஸ்ரீதரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுக்கள், தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, அறநிலையத் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதன் விபரம்:கடலுார் மாவட்டம், விருத்தாசலம், மணவாளநல்லுாரில் உள்ள கொளஞ்சியப்பர் கோவிலில், அர்ச்சகர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை. உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் படி, அனுபவம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் மட்டுமே நியமிக்கப்படுகின்றனர். அறநிலைய சட்ட விதிகளுக்கு உட்பட்டே, காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

மேலும், பல ஆண்டுகள் அனுபவம் நிறைந்த அர்ச்சகர்களை நியமிக்காமல், சான்றிதழ் படிப்பு படித்தவர்களை நியமிப்பதாகக் கூறும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. பணி ஓய்வு பெறும் நிலையில் உள்ள கோவில்களிலும், காலிப் பணியிடங்கள் உள்ள கோவில்களிலும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டப்படி, அர்ச்சகர் நியமிப்பதற்கான விளம்பரம் மட்டுமே கொடுக்கப் பட்டது.மேலும், அந்த அடிப்படை தகுதிகள் அவசியமானவை. தமிழக அரசால் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரைப்படியே, ஓராண்டு சான்றிதழ் அவசியம் என அறிவிக்கப்பட்டது. அதில், எந்த தவறும் கண்டுபிடிக்க முடியாது.

தற்போது, 58 கோவில்களில் நியமிக்கப்பட்ட அனைவரும், தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே, இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல; தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, வழக்கு விசாரணையை, நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X