கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிகிச்சை மறுப்பால் கணவர் பலி மனைவிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு

Added : ஆக 18, 2021
Share
Advertisement
சென்னை:மருத்துவமனையில் அனுமதிக்காமல் அலைக்கழிக்கப்பட்டு நோயாளி உயிரிழந்த விவகாரத்தில் அவரது மனைவிக்கு ரூ. 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அருசுக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.திருநெல்வேலி மாவட்டம், தென்பத்து பகுதியை சேர்ந்த காந்திமதி என்பவர், மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனு:கடந்தாண்டு என் கணவருக்கு கடுமையான வாந்தி மற்றும்

சென்னை:மருத்துவமனையில் அனுமதிக்காமல் அலைக்கழிக்கப்பட்டு நோயாளி உயிரிழந்த விவகாரத்தில் அவரது மனைவிக்கு ரூ. 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அருசுக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், தென்பத்து பகுதியை சேர்ந்த காந்திமதி என்பவர், மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனு:கடந்தாண்டு என் கணவருக்கு கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு, ஆம்புலன்சில் அழைத்து சென்றோம். அங்கு பணியில் இருந்த டாக்டர்கள், கொரோனா நேயாளிகளை மட்டுமே அனுமதிக்க முடியும் என கூறி விட்டனர்.

தொடர்ந்து, ஐந்து நாட்களாக அலைக்கழிக்கப்பட்டு, இறுதியாக என் கணவரை அனுமதித்தனர். இதற்கிடையே, கணவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அனுமதிக்க பட்ட இரண்டு மணி நேரத்திலேயே உயிரிழந்தார். எனவே, மனிதாபிமான அடிப்படையில் இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது. விசாரித்த ஆணைய உறுப்பினர் துரை ஜெயச்சந்திரன், நான்கு வாரங்களுக்குள் மனுதாரருக்கு, 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்குஉத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X