ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கோரி மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கோரி மனு

Added : ஆக 18, 2021
Share
சென்னை:'துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க, முதல்வர் அனுமதி அளிக்க வேண்டும்' என, துாத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கம், தொழில் துறை விற்பனையாளர்கள் சங்கம், ஆலையை சுற்றிஉள்ள கிராம மக்கள் கூட்டமைப்பு சார்பில், தலைமைச் செயலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.துாத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கம் அளித்த மனு:துாத்துக்குடி ஸ்டெர்லைட்

சென்னை:'துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க, முதல்வர் அனுமதி அளிக்க வேண்டும்' என, துாத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கம், தொழில் துறை விற்பனையாளர்கள் சங்கம், ஆலையை சுற்றிஉள்ள கிராம மக்கள் கூட்டமைப்பு சார்பில், தலைமைச் செயலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

துாத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கம் அளித்த மனு:துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வந்தோம். ஏழ்மையில் இருந்த தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் உயர்ந்தது. இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத, சில அன்னிய சக்திகளின் துாண்டுதலால், ஆலைக்கு எதிரான போராட்டம் நடந்தது.

அரசின் அலட்சியத்தால், போராட்டம் வன்முறையாக மாறியது. 2018ல் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. நாங்கள், 25 ஆண்டுகளாக எவ்வித பிரச்னையும் இல்லாமல் வேலை பார்த்து வந்தோம்.ஆலையால் கேன்சர் நோய் வருவதாக, பொய் பிரசாரம் செய்யப்பட்டது. ஆலையில் வேலை செய்த யாருக்கும் கேன்சர் வந்தது இல்லை.

ஆலை மூடப்பட்டதால், தொழிலாளர்கள் வேலை இழந்து, வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். தொழிலாளர்கள் வாழ்க்கையில் வசந்தம் வீச, ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க வேண்டும். எனவே, ஆலையில் தாமிர உற்பத்தி மற்றும் ஆலை விரிவாக்க பணிக்கு அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X