பொது செய்தி

இந்தியா

ஆட்டோ பர்மிட் புதுப்பிக்க உரிமையாளர்களுக்கு வாய்ப்பு

Added : ஆக 18, 2021
Share
Advertisement
புதுச்சேரி: நீண்ட காலமாக புதுப்பிக்காமல் உள்ள ஆட்டோ பர்மிட்கள், ஒரு முறை நடவடிக்கையாக புதுப்பித்துக் கொள்ள போக்குவரத்து துறை வாய்ப்பு வழங்கி உள்ளது.போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;புதுச்சேரி ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பர்மிட் புதுப்பிக்காமல், ஆட்டோக்களை இயக்கி வருகின்றனர்.5 ஆண்டிற்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டிய

புதுச்சேரி: நீண்ட காலமாக புதுப்பிக்காமல் உள்ள ஆட்டோ பர்மிட்கள், ஒரு முறை நடவடிக்கையாக புதுப்பித்துக் கொள்ள போக்குவரத்து துறை வாய்ப்பு வழங்கி உள்ளது.

போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;புதுச்சேரி ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பர்மிட் புதுப்பிக்காமல், ஆட்டோக்களை இயக்கி வருகின்றனர்.5 ஆண்டிற்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டிய பர்மிட்டை புதுப்பிக்காமல், பர்மிட் புதுப்பிக்கும் படிவத்தில் உள்ள பல காரணங்களை முன் வைக்கின்றனர்.

அவ்வாறு நீண்ட ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் உள்ள அனைத்து ஆட்டோ பர்மிட்களையும், ஒரு முறை நடவடிக்கையாக புதுப்பித்து தர போக்குவரத்து ஆணையம் முடிவு செய்துள்ளது.எனவே, 2022, மார்ச் 31ம் தேதிக்குள், தகுந்த ஆவணங்கள், காரணம் மற்றும் கூடுதல் கட்டணம் செலுத்தி, பர்மிட்டை புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டு கொள்ளப் படுகிறது.

அதன்பிறகு, இரண்டு ஆண்டுகள் கெடுவிற்கு உட்பட்ட பர்மிட்கள் மட்டுமே புதுப்பிக்கப்படும். இரண்டு ஆண்டிற்கு மேல் புதுப்பிக்கப்படாத பர்மிட்கள் சரணடைந்ததாக கருதப்பட்டு, ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X