அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதவிகளை துறந்த பண்பாளர்; இன்று ஜி.கே.மூப்பனார் பிறந்த நாள்

Updated : ஆக 19, 2021 | Added : ஆக 18, 2021
Share
Advertisement
தஞ்சை மாவட்டத்தில், பெரும் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர் ஜி.கருப்பையா மூப்பனார். காமராஜரை சந்தித்து, காங்கிரசில் இணைந்தார். காமராஜர் எவ்வாறு தேடி வந்த பிரதமர் பதவியை ஏற்க மறுத்தாரோ, அதேபோல் 1996ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் பிரதமராக வாய்ப்பு வந்தும் மறுத்தவர்.காங்கிரசில் பல பதவிகளை வகித்து, கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர். இந்திரா, ராஜிவ், நரசிம்ம ராவ் என
பதவிகளை துறந்த பண்பாளர்; இன்று ஜி.கே.மூப்பனார் பிறந்த நாள்

தஞ்சை மாவட்டத்தில், பெரும் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர் ஜி.கருப்பையா மூப்பனார். காமராஜரை சந்தித்து, காங்கிரசில் இணைந்தார். காமராஜர் எவ்வாறு தேடி வந்த பிரதமர் பதவியை ஏற்க மறுத்தாரோ, அதேபோல் 1996ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் பிரதமராக வாய்ப்பு வந்தும் மறுத்தவர்.

காங்கிரசில் பல பதவிகளை வகித்து, கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர். இந்திரா, ராஜிவ், நரசிம்ம ராவ் என பிரதமர்களிடம் நெருக்கமான நட்பு கொண்டிருந்தவர். பல்வேறு மாநிலங்களில் கட்சிக்கு பிரச்னை ஏற்பட்டபோது, மேலிட பார்வையாளராக சென்று சுமுக தீர்வு கண்டவர்.

கடந்த 1991ல் ஸ்ரீபெரும்புதுாரில் ராஜிவ் படுகொலை நடந்த போது அங்கிருந்த மூப்பனார், குண்டு வெடித்ததும் புகை மண்டலத்தில் ராஜிவை தேடி ஓடினார். 'ராஜிவ் கொல்லப்பட்டார்' எனக் கூறி, போலீசார் தடுத்து நிறுத்திய போது, 'என் தலைவன் இறந்து விட்டார். அவர் மீது பட்ட குண்டுகள் என் மீதும் படட்டும்' எனக் கூறி, சிதறுண்டு போன ராஜிவ் உடலை கண்டுபிடித்து கதறி அழுதார். தலைவனுக்கு ஆபத்து என்றதும் தன்னுயிரையும் தர தயாரானவர் மூப்பனார். இன்று அவரது 90வது பிறந்த தினம்.

- ஏ.எஸ்.பி.சிவசுந்தரம், மதுரை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X