பொது செய்தி

தமிழ்நாடு

மீனவ கிராம பிரச்னை தீர்க்க ஆர்.டி.ஓ., தலைமையில் குழு

Added : ஆக 18, 2021
Share
Advertisement
கடலுார்: கடலுாரில் இரு மீனவ கிராமங்களிடையே பிரச்னை தீர்க்க, ஆர்.டி.ஓ., தலைமையில் அமைதிக்குழு அமைக்கப்பட்டது.கடலுாரில் தேவனாம்பட்டினம் மற்றும் சோனாங்குப்பம் மீனவ கிராமத்தினரிடையே தொழில் ரீதியாக மோதல் ஏற்பட்டு வந்தது. அது, முடிவுக்கு வராமல், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் நிலவி வருகிறது.பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில்

கடலுார்: கடலுாரில் இரு மீனவ கிராமங்களிடையே பிரச்னை தீர்க்க, ஆர்.டி.ஓ., தலைமையில் அமைதிக்குழு அமைக்கப்பட்டது.

கடலுாரில் தேவனாம்பட்டினம் மற்றும் சோனாங்குப்பம் மீனவ கிராமத்தினரிடையே தொழில் ரீதியாக மோதல் ஏற்பட்டு வந்தது. அது, முடிவுக்கு வராமல், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் நிலவி வருகிறது.பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் இரு தரப்பு மீனவ கிராமத்தினருடனான அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.

எஸ்.பி., சக்திகணேசன், ஆர்.டி.ஓ., அதியமான் கவியரசு உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.இரு மீனவ கிராமத்தினரிடையே பிரச்னையை முழுமையாக தீர்க்க அமைதிக் குழு அமைத்து அதில் அதிகாரிகள் மற்றம் மீனவ கிராம முக்கியஸ்தர்கள் நியமிக்க கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, ஆர்.டி.ஓ., அதியமான் கவியரசு தலைமையில் டி.எஸ்.பி., மீன்வளத்துறை உதவி இயக்குனர், தாசில்தார் மற்றும் தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம் கிராமங்களில் தலா 3 முக்கியஸ்தர்கள் அடங்கிய புதிய அமைதிக்குழு அமைக்கப்பட்டது.இக்குழு மூலம், வரும்காலங்களில் எந்த பிரச்னையாக இருந்தாலும் பேசி தீர்வு காண முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X