பொது செய்தி

தமிழ்நாடு

சீர்த்திருத்த பள்ளியில் சிறுவன் தப்பியோட்டம்

Added : ஆக 18, 2021
Share
Advertisement
கடலுார்: கடலுார் சீர் திருத்தப் பள்ளியில் இருந்து தப்பியோடிய சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை, திருநின்றவூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடந்தாண்டு செப்., 28ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம், துாசி என்ற பகுதியில் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் பணம் வழிப்பறி செய்தார்.சிறுவனை துாசி போலீசார் பிடித்து கடலுார் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் கடந்த 13ம் தேதி அடைத்தனர்.

கடலுார்: கடலுார் சீர் திருத்தப் பள்ளியில் இருந்து தப்பியோடிய சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை, திருநின்றவூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடந்தாண்டு செப்., 28ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம், துாசி என்ற பகுதியில் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் பணம் வழிப்பறி செய்தார்.சிறுவனை துாசி போலீசார் பிடித்து கடலுார் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் கடந்த 13ம் தேதி அடைத்தனர்.

நேற்று முன்தினம் சிறுவன், பள்ளியில் இருந்து திடீரென தப்பியோடினார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் கடலுார், புதுநகர் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, தப்பியோடிய சிறுவனை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X