பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பின் பிடியில் கடம்பன்குளம் கண்மாய்; இரு போக விவசாயம் பாதிப்பு

Added : ஆக 18, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை அருகே வாணியங்குடி கடம்பன்குளம் கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றி வரத்து கால்வாய், சேதமான மடைகளை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.சிவகங்கை ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் கடம்பன்குளம் கண்மாய் 100 ஏக்கரில் உள்ளது. இக்கண்மாய்க்கு வாணியங்குடி பெரிய கண்மாய், உசிலங்குளம் கண்மாயிலுள்ள மழை நீர் பெருக்கெடுத்து வந்து இக்கண்மாயை நிரப்பும்.

சிவகங்கை : சிவகங்கை அருகே வாணியங்குடி கடம்பன்குளம் கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றி வரத்து கால்வாய், சேதமான மடைகளை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

சிவகங்கை ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் கடம்பன்குளம் கண்மாய் 100 ஏக்கரில் உள்ளது. இக்கண்மாய்க்கு வாணியங்குடி பெரிய கண்மாய், உசிலங்குளம் கண்மாயிலுள்ள மழை நீர் பெருக்கெடுத்து வந்து இக்கண்மாயை நிரப்பும். இக்கண்மாயின் கீழ் வாணியங்குடி, சானாங்குளம், கடம்பன்குளம் பகுதியை சேர்ந்த 300 ஏக்கர் விவசாயிகள் பாசன வசதி பெறுகின்றனர்.

மழை காலத்தில் கண்மாய் நிரம்பி கண்மாய்க்கு தெற்கே இரு மடை, கிழக்கே ஒரு மடையின் வழியே பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம் இப்பகுதி விவசாயிகள் நெல்,கடலை,வாழை,கரும்பு உள்ளிட்டவைகளை விளைவித்து வந்தனர்.ஆக்கிரமிப்பில் கண்மாய்இக்கண்மாய் கரைகளை உயர்த்தி கண்மாய் பரப்பு முழுவதையும் பாதுகாப்புடன் வைக்கவில்லை.

குறிப்பாக கண்மாய் எல்லை கற்களே இன்றி கண்மாய்களில் வீடுகள் கட்டியும்,விவசாயம் செய்தும் கண்மாய் பரப்பை சுருக்கி விட்டனர் கண்மாயை துார்வாராமல் வேலை உறுதி திட்டத்தில் மட்டுமே அவ்வப்போது கண்மாய் பரப்பை மண்வெட்டியால் 'சுரண்டி' விட்டுள்ளனர்.இதனால் கண்மாயில் நீர் சேகரமின்றி விரயமாகி வருகிறது.கண்மாய் துார்வாரவில்லைசி.கே.,கணேசன், விவசாயி, வாணியங்குடி: கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக துார்வார வேண்டும். மேலும் மடைகளை செப்பனிட்டு மழை நீர் முழுமையாக சேகரமாகும் விதத்தில் தயார்படுத்த வேண்டும். அப்போது தான் விவசாயிகள் இரு போக சாகுபடி எடுக்க முடியும்.ஆனால் கடந்த சில ஆண்டாக கண்மாய் துார்வாரப்படாமல்,மடைகள் சிதிலமடைந்து பாசன கால்வாயில் தண்ணீர் வரத்தின்றி விவசாயம் பொய்த்து வருகிறது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X