பொது செய்தி

தமிழ்நாடு

பேருல மட்டும் தாங்க பெரிய கண்மாய்: சோகத்தில் விவசாயிகள்

Added : ஆக 18, 2021
Share
Advertisement
ஆர்.எஸ்.மங்கலம் : தமிழகத்தின் இரண்டாவது பெரிய கண்மாயான ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயை முறையாக சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.தமிழகத்தின் இரண்டாவது பெரிய கண்மாய். நாரை தொடர்ச்சியாக பறக்க முடியாத நாற்பத்தி எட்டு குருச்சிகளை( கிராமங்களை) கொண்ட கண்மாய் என்ற சிறப்பு பெற்றது ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய், பேருல மட்டுமே பெரிய கண்மாய் என மாறி உள்ளதாக விவசாயிகள்

ஆர்.எஸ்.மங்கலம் : தமிழகத்தின் இரண்டாவது பெரிய கண்மாயான ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயை முறையாக சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தின் இரண்டாவது பெரிய கண்மாய். நாரை தொடர்ச்சியாக பறக்க முடியாத நாற்பத்தி எட்டு குருச்சிகளை( கிராமங்களை) கொண்ட கண்மாய் என்ற சிறப்பு பெற்றது ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய், பேருல மட்டுமே பெரிய கண்மாய் என மாறி உள்ளதாக விவசாயிகள் சோகமாக கூறுகின்றனர்.ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு நாட்டார் கால்வாய் மூலம் வைகை பாசனமும், சருகணி ஆறு மூலம் கிடைக்கும் உபரி நீர் மூலமும் கண்மாய்க்கு நீர் வருகிறது.

பல ஆண்டுகளாக பெரிய கண்மாய் முறையாக பராமரிப்பு செய்யப்படாததால் கண்மாய் பகுதியில் கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கண்மாய் மண்மேடாகிவிட்டது. விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.இந்தக் கண்மாய் பராமரிப்பு பணிக்கு 1997-98ல், ரூ.42.30 லட்சம், 2007-08ல், 6.33 கோடி, கடந்த ஆட்சியின் போது ரூ.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X