பொது செய்தி

தமிழ்நாடு

அரசின் 100 நாட்கள் சாதனை சுவரொட்டி: கலெக்டர் வெளியீடு

Added : ஆக 18, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தமிழக அரசின் 100 நாட்கள் சாதனை குறித்த சுவரொட்டிகள் மற்றும் ஒட்டு வில்லைகளை கலெக்டர் வெளியிட்டார்.தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்று கடந்த 14ம் தேதியுடன் 100 நாட்கள் நிறைவடைந்தது. அதனையொட்டி, தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள சாதனைகள், திட்டங்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்.அரசின் சிறப்புத் திட்ட செயல்பாடுகள், வளர்ச்சிப் பணிகள்,

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தமிழக அரசின் 100 நாட்கள் சாதனை குறித்த சுவரொட்டிகள் மற்றும் ஒட்டு வில்லைகளை கலெக்டர் வெளியிட்டார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்று கடந்த 14ம் தேதியுடன் 100 நாட்கள் நிறைவடைந்தது. அதனையொட்டி, தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள சாதனைகள், திட்டங்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்.அரசின் சிறப்புத் திட்ட செயல்பாடுகள், வளர்ச்சிப் பணிகள், முதல்வரின் சிறப்பு நிதியுதவித் திட்டம் போன்றவை குறித்த சாதனை மலர்கள், சுவரொட்டிகள், ஒட்டுவில்லைகள் ஆகியவை செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் பொதுமக்கள் அறியும் வண்ணம் வெளியிடப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர், அரசின் 100 நாட்கள் சாதனை குறித்த சுவரொட்டிகள் மற்றும் ஒட்டு வில்லைகளை வெளியிட்டார். இவை, பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் அரசு அலுவலக வளாகங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X