தமிழ்நாடு

தம்மம் குடிநீர் ஊரணி வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்பால் சிதைகிறது

Added : ஆக 18, 2021
Share
Advertisement
திருப்புத்துார் : திருப்புத்துார் தென்மாப்பட்டில் உள்ள தம்மம் குடிநீர் ஊரணி வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்பால் நீர் வரத்தின்றி சிதைந்து வருகிறது.திருப்புத்துார் நகரில் மிகவும் பழமையான குடிநீர் ஊரணிகளில் தென்மாப்பட்டு தம்மம் ஊரணியும் ஒன்று. இந்த ஊரணிக்கு பெரியகண்மாய் மடையிலிருந்து வரும் வரத்துக் கால்வாய் மூலம் நீர் வரத்து ஏற்படும். இந்த ஊரணி நீரின் சுவைக்காக

திருப்புத்துார் : திருப்புத்துார் தென்மாப்பட்டில் உள்ள தம்மம் குடிநீர் ஊரணி வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்பால் நீர் வரத்தின்றி சிதைந்து வருகிறது.

திருப்புத்துார் நகரில் மிகவும் பழமையான குடிநீர் ஊரணிகளில் தென்மாப்பட்டு தம்மம் ஊரணியும் ஒன்று. இந்த ஊரணிக்கு பெரியகண்மாய் மடையிலிருந்து வரும் வரத்துக் கால்வாய் மூலம் நீர் வரத்து ஏற்படும். இந்த ஊரணி நீரின் சுவைக்காக சுற்று வட்டார கிராமங்களிலிருந்து பலரும் வந்து குடிநீர் எடுத்துச் செல்வதுண்டு.

2007 ல் குடிநீர் வாரியத்தினர் இந்த ஊரணியை ரூ 22லட்சத்தில் மேம்படுத்தி சுற்றுச்சுவர், படித்துறை, வேலி அமைத்தனர்.ஆனால் நீர் வரத்திற்கான வரத்துக் கால்வாய்களை சீரமைக்கவில்லை. 'வயல்கள் வழியாக வரும் வரத்துக்கால்வாய் பராமரின்றி சிதைந்து விட்டது. தற்போது பெரும்பாலான வயல்கள் குடியிருப்புகளாக மாறி விட்டதால் பல இடங்களில் கால்வாய் ஆக்கிரமிப்பிலும் சிக்கியுள்ளது.

இதனால் நீர் வரத்தின்றி ஊரணியை பொதுமக்கள் பயன்படுத்த முடியவில்லை. அதனால் பராமரிப்பு பணிகளும் நடைபெற வில்லை. 'கஜா புயலில் ஒரு பக்க கரையும் இடிந்து விழுந்தது. ஆனால் இது வரை பராமரிக்கப் படவில்லை.பராமரிப்பு பணிகள் நடைபெறாவிட்டால், அனைத்து பக்க சுவர்களும் முழுமையாக விழுந்து ஊரணி சிதைந்து விடும் நிலையில் உள்ளது. ஊரணியை சீரமைப்பதுடன், வரத்துக்கால்வாயை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு புனரமைக்க வேண்டியதும் அவசியமாகும்

இப்பகுதியினர் மட்டுமின்றி 10க்கும் மேற்பட்ட கிராமத்திலிருந்தும் இங்கு வந்து முன்பு தண்ணீர் எடுப்பார்கள். இப்போது விலைக்கு வாங்கி தண்ணீர் குடிக்கிறோம். சமைக்கிறோம். இந்த ஊரணியை சீரமைத்து நிரந்தரமாக வரத்துக் கால்வாய் கட்டி கழிவு நீர் கலக்காத மழை நீர் வந்தால் ஊரணி நிரம்பி விடும்.நாகதுர்கா தேவி, தென்மாப்பட்டு

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X