ஆக்கிரமிப்பின் பிடியில் அஞ்சுகோட்டை கண்மாய்

Added : ஆக 18, 2021
Share
Advertisement
திருவாடானை : அஞ்சுகோட்டை பெரிய கண்மாய்,கரையக்கோட்டை உள்ளிட்ட நீர் பிடிப்பு பகுதிகளில் சீமைகருவேல மரங்கள் வளர்ந்து பராமரிக்கபடாமல் உள்ளது. மழை நீர் வரத்து கால்வாய்களும் புதர்மண்டி பாழாகியுள்ளது. திருவாடானை அருகே அஞ்சுகோட்டை பெரியகண்மாய் அஞ்சுகோட்டையில் துவங்கி கரையக்கோட்டை வரை 203 எக்டேர் பரப்பளவும், 59.26 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவும், 7 மடைகளும், 3 கலுங்கும், 500

திருவாடானை : அஞ்சுகோட்டை பெரிய கண்மாய்,கரையக்கோட்டை உள்ளிட்ட நீர் பிடிப்பு பகுதிகளில் சீமைகருவேல மரங்கள் வளர்ந்து பராமரிக்கபடாமல் உள்ளது. மழை நீர் வரத்து கால்வாய்களும் புதர்மண்டி பாழாகியுள்ளது.

திருவாடானை அருகே அஞ்சுகோட்டை பெரியகண்மாய் அஞ்சுகோட்டையில் துவங்கி கரையக்கோட்டை வரை 203 எக்டேர் பரப்பளவும், 59.26 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவும், 7 மடைகளும், 3 கலுங்கும், 500 ஏக்கர் பாசன நிலங்களும் உள்ளன.இதனை நம்பி விவசாயிகள் நன்செய், புன்செய் நிலங்களில் சாகுபடி செய்கின்றனர். கண்மாய் பராமரிப்பு இல்லாமல் சில இடங்களில் மணல் மேடாகிவிட்டது. இக்கண்மாய்க்கு ஆறு மூலம் வரத்துகால்வாய் வசதியில்லை.

போதிய மழை பெய்தால் மட்டுமே கண்மாய் நிரம்பும். இதன் மூலம் அஞ்சுகோட்டை, அழகமடை, செங்கமடை, கரையக்கோட்டை, மேலவயல், உள்ளிட்ட கிராமங்களில் நெல் விவசாயம் செய்யப்படுகிறது.கண்மாய் உள் பகுதி மட்டுமின்றி வயல்களுக்கு செல்லும் வரத்துகால்வாய்களிலும் செடிகள் மண்டியுள்ளது. செங்கமடை அருகே உபரி நீர் வெளியேறும் வகையில் கட்டப்பட்ட கலுங்கு கடந்தாண்டு பெய்த மழையில் சேதமடைந்துள்ளது. இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் இந்த ஆண்டு பருவமழை பெய்தாலும் போதுமான நீர் தேங்க வாய்ப்பில்லாமல் உள்ளது.

கரையக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு வயலுக்கு தண்ணீர் செல்லும் வகையில் அமைக்கப்பட்ட கால்வாய்களில் புதர் மண்டியுள்ளது.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் முத்துராமு கூறியதாவது: திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தின் பெரிய கண்மாயாக அஞ்சுகோட்டை கண்மாய் திகழ்கிறது. இக் கண்மாய்க்கு தேவகோட்டை அருகே எழுவன்கோட்டை ஆற்றிலிருந்து வரத்துகால்வாய் உள்ளது.

முந்தைய காலத்தில் இப்பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் ஆண்டுதோறும் மாட்டு வண்டிகளில் சென்று செடிகளை அகற்றி கால்வாயை மராமத்து செய்துள்ளனர். இதனால் விளைச்சல் அமோகமாக இருந்துள்ளது. தற்போது இக் கால்வாய் முற்றிலும் துார்ந்து விட்டது. இக் கால்வாயை துார்வாரினால் முழுமையான விவசாயம் செய்யமுடியும். கண்மாயை துார்வாரி கருவேல மரங்களை அகற்றி கரையை பலப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X