பொது செய்தி

தமிழ்நாடு

அரிவாளில் ஏறி வலம் வந்த மழுவேந்தி கருப்பர்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் மழுவேந்தி கருப்பர் கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு அரிவாள் மீது ஏறி சாமியாடி 8 கி.மீ.,வலம் வந்தார்.சிங்கம்புணரி கீழத் தெருவில் உள்ள மழுவேந்தி கருப்பர் கோயில் ஆடித் திருவிழா ஆக. 17 ல் நடந்தது. இதையொட்டி கிருங்காக்கோட்டை, பிள்ளையார்பட்டி, வேங்கைப்பட்டி, பிள்ளையார்நத்தம், பிரான்மலை பகுதி மருத்துவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மேலப்பட்டி
 அரிவாளில் ஏறி வலம்  வந்த மழுவேந்தி கருப்பர்

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் மழுவேந்தி கருப்பர் கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு அரிவாள் மீது ஏறி சாமியாடி 8 கி.மீ.,வலம் வந்தார்.

சிங்கம்புணரி கீழத் தெருவில் உள்ள மழுவேந்தி கருப்பர் கோயில் ஆடித் திருவிழா ஆக. 17 ல் நடந்தது. இதையொட்டி கிருங்காக்கோட்டை, பிள்ளையார்பட்டி, வேங்கைப்பட்டி, பிள்ளையார்நத்தம், பிரான்மலை பகுதி மருத்துவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மேலப்பட்டி அருகே உள்ள பிள்ளையார்பட்டியிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். 6 அடி நீளமுள்ள கூர்மையான 2 அரிவாள்கள் மீது ஏறி கருப்பர் சாமியாடிய படி 8 கி.மீ., ஊர்வலமாக வந்தார்.

கிருங்காக்கோட்டை, அணைக்கரைப்பட்டி, வழியாக சிங்கம்புணரி நாவிதர் ஊரணி வந்தனர். அங்கிருந்து கரகம் எடுத்து சிங்கம்புணரி மழுவேந்தி கருப்பர் கோயிலை வந்தடைந்தனர். அங்கு இரவு 10:00 மணிக்கு கிடா வெட்டி கருப்பருக்கு படையில் போடப்பட்டு வழிபாடு நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X