சேட்டையை துவக்கிய தலிபான்கள் ஷியா பிரிவு தலைவர் சிலை உடைப்பு

Added : ஆக 19, 2021
Share
Advertisement
காபூல்:ஆப்கானிஸ்தானில் தலிபான்களை எதிர்த்து சண்டையிட்டு, 1996ல் படுகொலை செய்யப்பட்ட ஷியா பிரிவின் தலைவர் அப்துல் அலி மஸாரியின் சிலையை, தலிபான்கள் உடைத்து சேதப்படுத்தினர்.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். 'கடந்த 1996 - 2001ல் இருந்ததை போல, பெண்களுக்கு எதிரான பழமைவாத கொள்கைகள் இன்றி ஆட்சி புரிவோம்' என, தலிபான் தலைவர்கள் உறுதி
 சேட்டையை துவக்கிய தலிபான்கள் ஷியா பிரிவு தலைவர் சிலை உடைப்பு

காபூல்:ஆப்கானிஸ்தானில் தலிபான்களை எதிர்த்து சண்டையிட்டு, 1996ல் படுகொலை செய்யப்பட்ட ஷியா பிரிவின் தலைவர் அப்துல் அலி மஸாரியின் சிலையை, தலிபான்கள் உடைத்து சேதப்படுத்தினர்.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். 'கடந்த 1996 - 2001ல் இருந்ததை போல, பெண்களுக்கு எதிரான பழமைவாத கொள்கைகள் இன்றி ஆட்சி புரிவோம்' என, தலிபான் தலைவர்கள் உறுதி அளித்துள்ளனர்.

இந்நிலையில் ஜலாலாபாத் நகரத்தில் தலிபான்களுக்கு எதிராக ஒன்று கூடிய பொதுமக்கள், அங்கு ஆப்கானிஸ்தான் தேசிய கொடியை ஏற்றினர்.தலிபான்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். கூட்டத்தை கலைப்பதற்காக அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்த தலிபான் பயங்கரவாதிகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் மூன்று பேர் இறந்தனர்.

தலைநகர் காபூலில், துாதரகங்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் வீடுகள் உள்ள பகுதிகளில் வாகனத்தில் துப்பாக்கி ஏந்தியபடி, தலிபான்கள் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். 'மக்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படுத்த மாட்டோம்' என, தலிபான்கள் உறுதி அளித்தாலும், மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர அச்சப்படும் நிலை தொடர்கிறது.

கடந்த, 1996ல் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியபோது அவர்களுக்கு எதிராக சண்டையிட்டு வந்த ஷியா பிரிவின் தலைவர் அப்துல் அலி மஸாரியை படுகொலை செய்தனர்.அவருக்கு ஆப்கனில் அமைக்கப்பட்டு இருந்த சிலையை தலிபான்கள் நேற்று உடைத்து சேதப்படுத்தினர்.


ஹக்கானி தலைவருடன் 'மாஜி' அதிபர் பேச்சு

தலிபான் பயங்கரவாத குழுவின் ஒரு பிரிவான ஹக்கானி குழுவை சேர்ந்த மூத்த தலைவர் அனாஸ் ஹக்கானியை, ஆப்கன் முன்னாள் அதிபர் ஹமித் கர்சாய் மற்றும் வெளியேற்றப்பட்ட அரசின் மூத்த தலைவர் அப்துல்லா அப்துல்லா ஆகியோர் சந்தித்து பேசினர்.தலிபான்களின் மூத்த அரசியல் தலைவர் முல்லா அப்துல் கனி பராதருடன் பேச்சு நடத்த, ஹக்கானியின் உதவியை நாடியதாக, கர்சாயின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். ஹக்கானி பயங்கரவாத குழுவை, தடை செய்யப்பட்ட இயக்கமாக, 2012ல் அமெரிக்கா அறிவித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X