ஒருவருக்கு கொரோனா நியூசி.,யில் ஊரடங்கு

Added : ஆக 19, 2021
Share
Advertisement
வெலிங்டன்:நியூசிலாந்தில், 'டெல்டா' வகை கொரோனா வைரசால் ஒருவர் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுதும் மூன்று நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.பாதிப்பு எண்ணிக்கை ஏழாக உயர்ந்ததை அடுத்து, முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.உலகம் முழுதும் கொரோனா வைரசால் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். எனினும் நியூசிலாந்தில் கொரோனாவால், 26 உயிரிழப்புகள் மட்டுமே

வெலிங்டன்:நியூசிலாந்தில், 'டெல்டா' வகை கொரோனா வைரசால் ஒருவர் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுதும் மூன்று நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.பாதிப்பு எண்ணிக்கை ஏழாக உயர்ந்ததை அடுத்து, முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுதும் கொரோனா வைரசால் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். எனினும் நியூசிலாந்தில் கொரோனாவால், 26 உயிரிழப்புகள் மட்டுமே ஏற்பட்டுள்ளன.சரியான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கொரோனாவில் இருந்து விடுபட்ட நியூசிலாந்து உலக நாடுகளுக்கு சிறந்த உதாரணமாக திகழ்ந்தது.

இந்நிலையில் இங்கு எந்தவித வெளிநாட்டு தொடர்பும் இல்லாமல் கொரோனா வைரசால் புதிதாக ஒருவர் பாதிக்கப்பட்டார்.அவர், டெல்டா வகை வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து நாடு முழுதும் மூன்று நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப் படுவதாக பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் அறிவித்தார்.

இந்நிலையில் மேலும் ஆறு பேர் இந்த டெல்டா வகை வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மக்கள் அனைவரும் முக கவசம் அணியவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X