பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காகித தொழிற்சாலை

Added : ஆக 19, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காகித தொழிற்சாலை அமைத்து, வேலை வாய்ப்பினை உருவாக்க வேண்டுமென பட்டதாரி இளைஞர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ஆயிரக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, வேலை கிடைக்காமல் தவிக்கின்றனர். தொழிற்சாலைகள், நிறுவனங்கள் ஆகியவை இப்பகுதியில் இல்லாததால்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காகித தொழிற்சாலை அமைத்து, வேலை வாய்ப்பினை உருவாக்க வேண்டுமென பட்டதாரி இளைஞர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ஆயிரக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, வேலை கிடைக்காமல் தவிக்கின்றனர். தொழிற்சாலைகள், நிறுவனங்கள் ஆகியவை இப்பகுதியில் இல்லாததால் இளைஞர்கள் பலர் வெளிநாடுகளுக்கும், வெளிமாவட்டங்களுக்கும் வேலைக்குச் சென்று கஷ்டப்படுகின்றனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள், உள்ளூரிலேயே கிடைக்கும் வேலையை செய்து வருகின்றனர்.எனவே, இம்மாவட்டத்தில் வேலை வாய்ப்பினை உருவாக்க தொழிற்சாலை கொண்டு வருவது மிகவும் அவசியமாக உள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரிஷிவந்தியம், மாடாம்பூண்டி கூட்ரோடு, உளுந்துார்பேட்டை, கடுவனுார், கருந்தலாக்குறிச்சி உட்பட பல்வேறு பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் யூகலிப்டஸ் மரங்கள் வளர்க்கப்படுகிறது.

மரங்கள் நன்கு வளர்ந்தவுடன் அறுவடை செய்து, ஈரோடு மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் இயங்கும் தனியார் தொழிற்சாலை அல்லது கரூர் மாவட்டம், காகிதபுறத்தில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.ஆண்டுதோறும் ஒப்பந்த அடிப்படையில் விலைப்புள்ளி கோரப்பட்டு மரங்கள் அறுவடை செய்யப்படுகின்றன. மரத்தை அறுவடை செய்து, சிறிய துண்டுகளாக வெட்டி, தோலை உரித்து லாரிகளில் ஏற்றிச் செல்ல டன் ஒன்றுக்கு 3,000 ரூபாய் வரை செலவாகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆண்டுதோறும் 50 ஆயிரம் டன்னுக்கும் அதிகமான மரங்கள் அறுவடை செய்யப்படுகின்றன. இதுதவிர, இங்குள்ள சர்க்கரை ஆலைகளிலிருந்து, கரும்பு சக்கைகளும், அருகாமையில் உள்ள விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விளையும் சவுக்கு மரங்கள், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், அரூர், ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளில் விளையும் யூகலிப்டஸ் மரங்களும், காகித தொழிற்சாலைக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.பேப்பர் தயாரிப்புக்கு பயன்படும் முக்கிய மூலப்பொருட்களான யூகலிப்டஸ் மரம், சவுக்கு மரம், கரும்பு சக்கைகள் ஆகியவை கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிகளவில் விளைகிறது.

எனவே, இம்மாவட்டத்தில் காகித தொழிற்சாலை அமைக்கலாம். இதன் மூலம் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் செலவில் பெரும்பகுதி குறைவதுடன், பொருளாதார ரீதியாக மாவட்டம் வளர்ச்சியடையும்.குறிப்பாக, பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். எனவே, மாவட்டத்தில் காகித தொழிற்சாலை அமைக்க கலெக்டர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X