சிறப்பு டி.ஜி.பி., மீதான பாலியல் வழக்கு :ஐகோர்ட் உத்தரவு சுப்ரீம் கோர்ட்டில் ரத்து

Updated : ஆக 19, 2021 | Added : ஆக 19, 2021 | கருத்துகள் (10+ 13)
Share
Advertisement
புதுடில்லி :பாலியல் குற்றச்சாட்டில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ள தமிழக சிறப்பு டி.ஜி.பி., மீதான வழக்கை, தினசரி அடிப்படையில் விசாரித்து டிசம்பருக்குள் முடித்து வைக்குமாறு, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.தமிழக பெண் எஸ்.பி.,க்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில், தமிழக சட்டம் - ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி., சஸ்பெண்ட்
சிறப்பு டி.ஜி.பி.,  பாலியல் வழக்கு ஐகோர்ட் உத்தரவு சுப்ரீம் கோர்ட்டில் ரத்து

புதுடில்லி :பாலியல் குற்றச்சாட்டில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ள தமிழக சிறப்பு டி.ஜி.பி., மீதான வழக்கை, தினசரி அடிப்படையில் விசாரித்து டிசம்பருக்குள் முடித்து வைக்குமாறு, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
தமிழக பெண் எஸ்.பி.,க்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில், தமிழக சட்டம் - ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி., சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

மேலும், புகார் அளிக்க வந்த பெண் எஸ்.பி.,யை திருப்பி அனுப்பிய குற்றச்சாட்டில், காவல் துறை கண்காணிப்பாளர் ஒருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.இருவருக்கும் எதிராக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


latest tamil news



இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இதற்கிடையே, இந்த வழக்கை தினசரி விசாரணை அடிப்படையில் டிசம்பருக்குள் முடித்து வைக்க, விழுப்புரம் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்தும், தன் மீதான வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரியும், சிறப்பு டி.ஜி.பி., உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தார்.இந்த மனுக்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தன.விசாரணையின் போது, சிறப்பு டி.ஜி.பி., தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, வழக்கறிஞர்கள் இளம்பாரதி, அப்துல் சலீம் ஆகியோர் ஆஜராகி, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை தள்ளுபடி செய்து, வழக்கு விசாரணையை, அண்டை மாநிலத்திற்கு மாற்றி உத்தரவிடுமாறு கோரினர்.
நீதிபதிகள் அமர்வு, குற்றத்தின் தன்மை அடிப்படையில், விழுப்புரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வழக்கை தொடர்ந்து விசாரிக்குமாறு உத்தரவிட்டது. மேலும், தினசரி அடிப்படையில் வழக்கை விசாரித்து டிசம்பருக்குள் முடிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.மேலும், விழுப்புரம் மாஜிஸ்திரேட் நீதிமன்ற விசாரணையை கண்காணிக்கக் கூடாது எனவும் உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது. உயர் நீதிமன்றம் தானாக எடுத்துக் கொண்ட, சிறப்பு டி.ஜி.பி., மீதான வழக்கையும் முடித்து வைத்தது.இதையடுத்து, வேறு மாநிலத்திற்கு தன் வழக்கை மாற்றக் கோரி தாக்கல் செய்த மனுவை, சிறப்பு டி.ஜி.பி., 'வாபஸ்' பெற்றார்.

Advertisement




வாசகர் கருத்து (10+ 13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
19-ஆக-202118:11:50 IST Report Abuse
RajanRajan சீன் 1 சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சீன் 2 வழக்கை தினசரி விசாரணை அடிப்படையில் டிசம்பருக்குள் முடித்து வைக்க, விழுப்புரம் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சீன் 3 நீதிபதிகள் அமர்வு, குற்றத்தின் தன்மை அடிப்படையில், விழுப்புரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வழக்கை தொடர்ந்து விசாரிக்குமாறு உத்தரவிட்டது. சீன் 4 மேலும், தினசரி அடிப்படையில் வழக்கை விசாரித்து டிசம்பருக்குள் முடிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.சீன் 5 மேலும், விழுப்புரம் மாஜிஸ்திரேட் நீதிமன்ற விசாரணையை கண்காணிக்கக் கூடாது எனவும் உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது. சீன் 6 உயர் நீதிமன்றம் தானாக எடுத்துக் கொண்ட, சிறப்பு டி.ஜி.பி., மீதான வழக்கையும் முடித்து வைத்தது. சீன் 7 இதையடுத்து, வேறு மாநிலத்திற்கு தன் வழக்கை மாற்றக் கோரி தாக்கல் செய்த மனுவை, சிறப்பு டி.ஜி.பி., 'வாபஸ்' பெற்றார். யாருக்காச்சும் ஏதாச்சும் தெளிவா புரிஞ்சா கொஞ்சம் விளக்கம் சொல்லுங்களேன். இந்த லட்ச்சனத்திலே ராணுவத்தில் ஆண்களுக்கு இணையா பெண்களும் சமநோக்கு பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அப்போ அங்கே பாலியல் அரங்கேற்றம் இருசாராராலும் அவர்களின் ரங்கிற்கு தகுந்த மாதிரி அரங்கேறினால் நிலைமை என்னவாகும் மைலார்டு. தேவையா இதெல்லாம்.?? இங்கே பாலியல் குற்றவாளியால் பதிப்படைந்தவர் - புகார் கொடுத்தார். பாலியல் குற்றவாளியான உயர் அதிகாரி வழக்கை வேறுமாநிலத்திற்கு மாற்ற கோரி மனுதாக்கல் பண்ணினார். உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்தின் கதவை மூடியது. பாலியல் குற்றவாளி டி ஜி பி தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றார். பாலியல் துன்புறுத்த பட்டவர் நிலைமை என்ன என்பதை நீதிமன்றத்தின் அணுகுமுறை என்ன காட்டுகிறது? ஒரு பாதிக்கபட்ட நிரபராதி நீதி வேண்டி நீதிமன்றத்திற்கு சென்றால் அவர் நிலைமை என்னவாகும் என்பதை தானே காட்டுகிறது. அதாவது நிரபராதியும் சட்டத்தால் தண்டிக்க படலாம் எனும் சீன் தானே உருவாகிறது. அப்போ இங்கே நம்ம விக்கிரமாதித்தனிடம் வேதாளம் முன்வைத்த கேள்வி என்ன?? இந்த தேசத்தின் நான்கு தூண்களான அட்வகேட் விஸ்கி நல்ல தூக்குதா அல்லாட்டி டீச்சர்ஸ் விஸ்கி உச்சம் தொடுத்தான்னு சபையோர் தான் பார்த்து தீர்ப்பு வழங்க வேண்டும். பதில் சொல்லாவிட்டால் தலை சுக்குநூறாக வெடித்து சிதறிவிடும். அண்ணே, உனக்கென்னடா ஆச்சுது.? அந்த படத்துலே வடிவேலன் சுடுகாட்டிலே பொணத்த வச்சு பேசுனா டயலாக் தான் என் தலையை சுற்றி சுற்றி அடிக்குது. அதான உன் பிரச்சினை. நேர போடா அந்த டாஸ்மாக்குக்கு. அங்கே போயி ஒரு டாக்டர்ஸ் விஸ்கி புள் வாங்கி அடிச்சுட்டு படுத்துடு. நாளைக்கு சுறுசுறுப்பாயிடுவே. போ போ கடைய அடைச்சுடா போவுறனுங்கடா.தத்தி.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
19-ஆக-202114:03:39 IST Report Abuse
Vena Suna உயர் நீதி மன்றம் bulb வாங்கியது
Rate this:
Cancel
Thulasingam Jayaram Pillai - Chenai,இந்தியா
19-ஆக-202113:26:57 IST Report Abuse
Thulasingam Jayaram Pillai என்ன மாதிரியான தீர்ப்பு இது? உச்ச நீதிமன்ற நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு இந்த விசாரணையை தாமதப் படுத்தும் நோக்கினை ஆதரிப்பது சரியா? தினமும் விசாரித்து விரைவில் தீர்ப்பு வருவது தவறா? ஒன்னும் புரியலையே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X