தமிழ்நாடு

ஊராட்சி தலைவர், உறுப்பினர் தேர்தலை நடத்த ஏற்பாடு! நகராட்சி,பேரூராட்சி உறுப்பினர் தேர்வுக்கும் தயார்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : நடக்க உள்ள நகராட்சி,பேரூராட்சி உள்ளாட்சித் தேர்தல் உடன்ராமநாதபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள மாவட்ட கவுன்சிலர், ஊராட்சித்தலைவர்கள், வார்டு உறுப்பினர் பணியிடங்களுக்கு தேர்தல் நடத்த மாவட்ட நிர்வாகம்நடவடிக்கை எடுத்துள்ளது.தமிழகத்தில் விரைவில் மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம்தயாராகி வருகிறது. இத்துடன் ஊராட்சிகளில்

ராமநாதபுரம் : நடக்க உள்ள நகராட்சி,பேரூராட்சி உள்ளாட்சித் தேர்தல் உடன்ராமநாதபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள மாவட்ட கவுன்சிலர், ஊராட்சித்தலைவர்கள், வார்டு உறுப்பினர் பணியிடங்களுக்கு தேர்தல் நடத்த மாவட்ட நிர்வாகம்நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழகத்தில் விரைவில் மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம்தயாராகி வருகிறது. இத்துடன் ஊராட்சிகளில் காலியாக உள்ளபதவிகளுக்கும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம்ஏற்பாடு செய்ய மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 429 ஊராட்சிகள்உள்ளன. 11 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.

இவற்றில் பரமக்குடிபோகலுார் ஒன்றியம் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கும், கடலாடிஒன்றியத்தில் எம்.கரிசல் குளம், ராமநாதபுரம் ஒன்றியத்தில் சக்கரக்கோட்டை, திருப்புல்லாணி ஒன்றியத்தில் கொம்பூதி,ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியத்தில் ஏ.ஆர்.மங்கலம், திருவாடானை ஒன்றியத்தில் பழங்குளம், முதுகுளத்துார் ஒன்றியத்தில் மகிண்டிஆகிய ஆறு ஊராட்சி தலைவர் பதவிக்கும் பிற ஊராட்சிகளில் காலியாக உள்ள வார்டு உறுப்பினர் 33 பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

ஊராட்சிகள் உதவி இயக்குனர் கேசவதாசன் கூறுகையில், நகராட்சி, பேரூராட்சிக்கான தேர்தலுடன், ஊராட்சிகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேர்தல் நடைபெறஉள்ளது. இதற்காக வாக்குசாவடி மையங்கள், வாக்காளர் பட்டியல்சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் தொடங்கியுள்ளது,'என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X