தமிழ்நாடு

பல மாதமாக வராத குடிநீர்; ஒரு குடம் ரூ.12க்கு வாங்கி சிரமப்படும் மக்கள்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் கொத்தனார் நடுத்தெருவில் கடந்த சில மாதங்களாக 20க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு காவிரி குடிநீர் சரியாகவரவில்லை. ஒரு குடம் ரூ.12க்கு வாங்கி சிரமப்படுகின்றனர்.ராமநாதபுரம் நகராட்சி 31வது வார்டிற்குட்பட்ட கொத்தனார் தெரு பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் நடுத்தெருவில் 25 வீடுகளுக்கு மட்டும் கடந்த சில மாதங்களாக காவிரி

ராமநாதபுரம் : ராமநாதபுரம் கொத்தனார் நடுத்தெருவில் கடந்த சில மாதங்களாக 20க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு காவிரி குடிநீர் சரியாகவரவில்லை. ஒரு குடம் ரூ.12க்கு வாங்கி சிரமப்படுகின்றனர்.

ராமநாதபுரம் நகராட்சி 31வது வார்டிற்குட்பட்ட கொத்தனார் தெரு பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் நடுத்தெருவில் 25 வீடுகளுக்கு மட்டும் கடந்த சில மாதங்களாக காவிரி குடிநீர் வரவில்லை. இதுதொடர்பாக நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என மக்கள் புலம்புகின்றனர்.அப்பகுதியைச் சேர்ந்த ஜோதி கூறுகையில், கொத்தனார் நடுத்தெருவில் மட்டும் 3 மாதமாக சரியாக காவிரி குடிநீர் வருவது இல்லை. பொதுக்குழாயை மூடிவிட்டனர்.

இதனால் லாரியில் வரும் ஒரு குடம் ரூ.12க்கு விலைக்கு வாங்கி சிரமப்படுகிறோம். எங்கள் பகுதிக்கு தினமும் காவிரி குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என்றார்.

நகராட்சி கமிஷனர்(பொ) நீலேஸ்வரர் கூறுகையில், 'கொத்தனார் நடுத்தெருவில் குடிநீர் வினியோகம் வழங்கப்படுகிறது. சிலர் மோட்டார் மூலம் குடிநீர் எடுக்கின்றனர். இதனால் மேடான பகுதியில் வினியோகம் பாதிக்கிறது. மோட்டார்களை பறிமுதல் செய்து சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'என்றார்.--------------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X