சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒப்பந்தத்தை புதுப்பிக்க கேட்டு முன்னாள் கவுன்சிலர் தர்ணா

Added : ஆக 19, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை நகராட்சியில் ஒப்பந்தத்தை புதுப்பிக்க கோரி முன்னாள் கவுன்சிலர், அ.ம.மு.க., நகர் செயலாளரான அன்புமணி நகராட்சி அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டார்.இந்நகராட்சியில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் எடுக்க 16 ஒப்பந்ததாரர்கள் பதிவு செய்துள்ளனர். தற்போது ஒப்பந்த காலம் முடிந்து ஒப்பந்தத்தை புதுப்பித்தல், புதிய விண்ணப்பம் செய்தல் பணி நடக்கிறது. நேற்று

சிவகங்கை : சிவகங்கை நகராட்சியில் ஒப்பந்தத்தை புதுப்பிக்க கோரி முன்னாள் கவுன்சிலர், அ.ம.மு.க., நகர் செயலாளரான அன்புமணி நகராட்சி அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டார்.

இந்நகராட்சியில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் எடுக்க 16 ஒப்பந்ததாரர்கள் பதிவு செய்துள்ளனர். தற்போது ஒப்பந்த காலம் முடிந்து ஒப்பந்தத்தை புதுப்பித்தல், புதிய விண்ணப்பம் செய்தல் பணி நடக்கிறது. நேற்று ஒப்பந்ததாரர் மூர்த்தியின் டெண்டர் விண்ணப்பத்தை புதுப்பித்து தரக்கோரி முன்னாள் கவுன்சிலர் அன்புமணி, நகராட்சி கமிஷனர் அய்யப்பனிடம் முறையிட்டார்.

கடந்த 4 ஆண்டாக பணி செய்யாததோடு, டெண்டரை புதுப்பிக்காமலும் ஒப்பந்ததாரர் மூர்த்தி இருந்துள்ளார்.புதிதாக விண்ணப்பித்து தான் ஒப்பந்ததாரராக பதிய முடியும் என கமிஷனர் அய்யனார் தெரிவித்துள்ளார். உரிய அபராதத்தை பெற்று புதுப்பிக்கலாம் என முன்னாள் கவுன்சிலர் வலியுறுத்தினார். இதற்கு சட்டத்தில் இடமில்லை என கமிஷனர் தெரிவிக்கவே அதிருப்தியான அன்புமணி நகராட்சி அலுவலகம் முன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X