சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒன்றிய கூட்டத்தில் வெளிநடப்பு; அ.தி.மு.க., கவுன்சிலர் தர்ணா

Added : ஆக 19, 2021
Share
Advertisement
இளையான்குடி : இளையான்குடி ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் தி.மு.க.,கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தும் அ.தி.மு.க.,கவுன்சிலர் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.இளையான்குடி ஊராட்சி ஒன்றிய கூட்டம் தலைவர் முனியாண்டி தலைமையில் நடந்தது.பி.டி.ஓ.,க்கள் சந்திரா,சரவணன் முன்னிலை வகித்தனர்.மேலாளர் தவமணி வரவேற்றார். கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவர் அறையில் முதல்வர் ஸ்டாலின் படம் வைக்க

இளையான்குடி : இளையான்குடி ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் தி.மு.க.,கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தும் அ.தி.மு.க.,கவுன்சிலர் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இளையான்குடி ஊராட்சி ஒன்றிய கூட்டம் தலைவர் முனியாண்டி தலைமையில் நடந்தது.பி.டி.ஓ.,க்கள் சந்திரா,சரவணன் முன்னிலை வகித்தனர்.மேலாளர் தவமணி வரவேற்றார். கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவர் அறையில் முதல்வர் ஸ்டாலின் படம் வைக்க கோரி தி.மு.க., கவுன்சிலர்கள் பழனியம்மாள், மகேஸ்வரி, முருகன் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதைத்தொடர்ந்து அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் சண்முகம் தனது கவுன்சிலுக்குட்பட்ட பகுதிகளில் திட்ட பணிகளை ஊராட்சி ஒன்றிய தலைவர் முனியாண்டி புறக்கணித்து வருவதாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.பி.டி.ஓ., சந்திரா தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததை தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய தலைவர் அறையில் முதல்வர் படம் அமைக்க ஏற்பாடு செய்தார்.

இதனைத் தொடர்ந்து நடந்த கூட்டத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர் கீர்த்தனா தனது கவுன்சிலுக்குட்பட்ட திருவேங்கடம் கிராமத்தில் நிழற்குடை, திருவள்ளூர் கிராமத்தில் காவிரி கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்த வேண்டும் என்றார்.தலைவர் முனியாண்டி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X