பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண்மை விரிவாக்க மைய கட்டடத்திற்கு எதிர்ப்பு ; அதிகாரிகள் சமரசம்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
காரைக்குடி : காரைக்குடி கழனிவாசல் பகுதியில் புதிய துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டட பணிக்கு, பரஅழகன் ஆதிதிராவிடர் அறக்கட்டளையினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.காரைக்குடி கழனிவாசல் பருப்பூரணி அருகே 1972ல் துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டடம் கட்டப்பட்டது. துணை வேளாண் அலுவலர் தலைமையில் விதைகள், உயிர் உரங்கள் வழங்கப்பட்டதோடு, விவசாயிகளுக்கு ஆலோசனையும் வழங்கப்பட்டு வந்தது.

காரைக்குடி : காரைக்குடி கழனிவாசல் பகுதியில் புதிய துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டட பணிக்கு, பரஅழகன் ஆதிதிராவிடர் அறக்கட்டளையினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

காரைக்குடி கழனிவாசல் பருப்பூரணி அருகே 1972ல் துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டடம் கட்டப்பட்டது. துணை வேளாண் அலுவலர் தலைமையில் விதைகள், உயிர் உரங்கள் வழங்கப்பட்டதோடு, விவசாயிகளுக்கு ஆலோசனையும் வழங்கப்பட்டு வந்தது. கட்டடம் முழுவதுமாக சேதமடைந்ததால், கடந்த மார்ச்சில் பழைய கட்டடம் இடிக்கப்பட்டது. புதிய கட்டட பணிக்கான போர்வெல் போடும் பணி நேற்று நடந்தது.

வேளாண் கட்டடம் உள்ள இடம் தங்களுக்கு சொந்தமானது என பரஅழகன் ஆதிதிராவிடர் அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். அங்கு வந்த தாசில்தார் மாணிக்கவாசகம், டி.எஸ்.பி., வினோஜி, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சண்முக ஜெயந்தி உள்ளிட்ட பலர் அறக்கட்டளையை சேர்ந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

தாசில்தார் மாணிக்கவாசகம் கூறுகையில்; கழனிவாசலில், இருந்த பழைய புதிய துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டடம் அப்புறப்படுத்திவிட்டு புதிய கட்டடப்பணிக்காக போர்வெல் அமைக்கும் பணி நடந்தது. பரஅழகன் ஆதிதிராவிடர் அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் சம்மந்தப்பட்ட இடம் தங்களுக்கு சொந்தமானது என தெரிவித்துள்ளனர். ஆதாரத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X